பச்சை நிறம்.. உடல் முழுவதும் புஸுபுஸு ரோமம்.. அட இப்படிக்கூட பாம்பு இருக்குமா?

பச்சை நிறத்தில் உடல் முழுவதும் ரோமத்துடன் கூடிய பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்ட வித்தியாசமான பாம்பு ஒன்றை தாய்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர். அந்த பாம்பின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பு என்றாலே அதன் வழவழப்பான, உருண்டு திரண்ட உடம்புதான் நம் நினைவிற்கு முதலில் வரும். ஆனால், உடல் முழுவதும் ரோமங்களுடன் பாம்பு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தாய்லாந்தின் சக்கூன் என்ற நகருக்கு அருகே உள்ள சதுப்புநில காட்டில்தான் இந்தப் பாம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். டூ என்ற நபர்தான் முதன்முதலில் இந்தப் பாம்பை தனது வீட்டின் அருகே பார்த்துள்ளார். வேலை முடிந்து இரவில் வீடு திரும்பிய போது, இந்தப் பாம்பை அவர் கண்டுள்ளார்.

புஸுபுஸு ரோமம்

புஸுபுஸு ரோமம்

உடல் முழுவதும் பச்சை நிற ரோமங்களுடன் இருந்த இந்தப் பாம்பை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். முதலில் அது ஏதோ பாசி பிடித்துள்ளதாகத்தான் டூ கருதியுள்ளார். ஆனால் அது நெளிவதைப் பார்த்து, அருகில் சென்றுள்ளார். அப்போது அதன் வாயில் இருந்து பாம்புக்கு இருப்பது போன்ற நீளமான நாக்கு வெளியில் வந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

தொட்டி

தொட்டி

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.. சாதாரண பாம்பிற்கே இப்படி என்றால், இப்படி வித்தியாசமான பாம்பைப் பார்த்தால் நாமெல்லாம் பயந்து அங்கிருந்து ஓடியிருப்போம். ஆனால் டூ அப்படி செய்யவில்லை. மாறாக அந்தப் பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்து தனது வீட்டு தண்ணீர் தொட்டியில் விட்டு விட்டார்.

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

கூடவே, உடல் முழுவதும் புஸுபுஸுவென பச்சை ரோமத்துடன் அந்தப் பாம்பு தண்ணீரில் ஊர்ந்து செல்வதை வீடியோவாக பதிவு செய்த டூவின் உறவினர், அதனை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். இப்படி ஒரு பாம்பைப் பார்த்திராத நெட்டிசன்கள், இந்த வீடியோவை மற்றவர்களுக்குப் பகிர்ந்து, வைரலாக்கி விட்டனர். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் டூ வீட்டிற்கு நேரில் சென்றும் இந்தப் பாம்பைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.

பாசி பிடித்த பாம்பு

பாசி பிடித்த பாம்பு

இந்தப் பாம்பைப் பார்த்து சிலர் டிராகன் போல் இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலரோ, 'இது நீரில் வாழும் பாம்பு வகை.. அதன் உடம்பில் பாசி படிந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளனர். இந்த அதிசய பாம்பு பற்றிய தகவலை உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கும் டூ கொண்டு சென்றுள்ளார்.

ஆல்காதான் காரணம்

ஆல்காதான் காரணம்

அவர்கள் இந்த புதுவகை ரோமம் கொண்ட பாம்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த விலங்குகளை மீட்டு பராமரிக்கும் அமைப்பான வைல்ட் லைப் அனிமல் ரெஸ்க்யூ அண்ட் கேர் சொசைட்டி ( wildlife-arc)ல் பாம்பு இனங்களின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சாம் சாட்ஃபீல்ட், "இந்த உயிரினம் அதன் செதில்களில் வளரும் ஆல்காவுடன் கூடிய பஃப் முகம் கொண்ட நீர் பாம்பாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடரும் ஆராய்ச்சி

தொடரும் ஆராய்ச்சி

தொடர்ந்து இந்த அரிய வகை பாம்பு பற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. அவர்களது ஆய்வின் முடிவில், இந்தப் பாம்பு பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான உடலமைப்புடன் உள்ள இந்த பாம்பின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+