ராத்திரி நேரம்.. கும்மிருட்டு.. நைஸாக நடந்து வந்து.. வீடு வீடாக.. நடமாடும் மர்ம நபர்!
ராத்திரியில் தலையில் டிவி மாட்டி கொண்டு நடமாடுபவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஹென்ரிகா, விர்ஜீனியா: அமெரிக்காவில் ஒரு நூதன மனிதர் செய்த செயலால் அந்த நகரமே பரபரப்பாகியுள்ளது. அதாவது இவர் தலையில் டிவியை மாட்டிக் கொண்டு வீடு வீடாக போய் ராத்திரியில் பழைய டிவி பெட்டியை வைத்து விட்டு வருகிறார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று தெரியவில்லை.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ளது ஹென்ரிகா நகரம். இந்த நகருக்கு அருகே உள்ள ஹாம்ப்ஷயர் என்ற கிராமத்தில்தான் இந்தக் கூத்து. இங்குள்ள வீடுகளுக்கு இரவில் வந்த ஒரு மர்ம நபர் வீட்டு வாசலில் ஒரு டிவி பெட்டியை வைத்து விட்டுப் போயுள்ளார். அந்த நபரும் தனது முகத்தில் முகமூடி போல டிவி பெட்டியை மாட்டியுள்ளார்.

கிட்டத்தட்ட 50 வீடுகளில் இது போல செய்துள்ளார் அந்த நபர். அடுத்த நாள் காலையில் வீடுகளை விட்டு வெளியே வந்தவர்கள் வீட்டு வாசலில் டிவி இருப்பதைப் பார்த்து அதிர்ந்து குழம்பிப் போனார்கள். யார் வைத்தது என்று தெரியாமல் விழித்துள்ளனர்.
தங்களது வீட்டில்தான் டிவி இருந்ததாக முதலில் நினைத்தவர்கள் அந்த பகுதி முழுவதுமே வீடுகளில் டிவி வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக கிறிஸ்துமஸின்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு வருவோர் இது போல வீடுகளுக்கு வெளியே ஏதாவது கிப்ட் வைத்து விட்டுப் போவது வழக்கம். ஆனால் இப்படி டிவியை கொண்டு வைத்தவர் யார் என்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தற்போது போலீஸார் விசாரணையில் குதித்துள்ளனர். இது விளையாட்டுக்காக செய்யப்பட்டதா அல்லது சீரியஸாகவே யாரேனும் கொண்டு வந்து உபயோகப்படாத டிவிகளை போட்டு விட்டுச் சென்றுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications