நடு ஊரில் விழுந்த மர்ம பொருள்.. வானில் இருந்து வந்த 500 கிலோ "ரிங்.." கலர் வேற மாறுதாம்! திக்திக்
நைரோபி: அமைதியான ஊரில் திடீரென வானில் இருந்து மர்மப் பொருள் விழுந்தால் எப்படி இருக்கும். வழக்கமாக இதுபோன்ற கதைகளை நாம் அமெரிக்காவில் தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், இப்போது கென்யாவில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. சுமார் 500 கிலோ எடையுள்ள மர்மப் பொருள் திடீரென விழுந்தது அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த பல ஆண்டுகளாகவே ஏலியன்கள் மற்றும் வானில் சுற்றும் மர்மப் பொருட்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேச்சுகள் எழுந்து வருகிறது. அதிலும் சமீப காலமாக அமெரிக்காவில் இது தொடர்பான தகவல்கள் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீரென வானில் இருந்து மர்மப் பொருள் விழுந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர். இது குறித்து நாம் பார்க்கலாம்.
மர்ம பொருள்:
தென்கொரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் வானில் இருந்து ஒரு மர்மப் பொருள் விழுந்துள்ளது. வானில் இருந்து ஏதோ ஒன்று விழுவது போலப் பலத்த சத்தம் கேட்ட நிலையில், சிவப்பு நிறத்தில் மர்மப் பொருள் அங்கு விழுந்துள்ளது. உடனடியாக அது என்னவென்று பார்க்கக் கிராம மக்கள் அருகே சென்றுள்ளனர். சிவப்பு நிறத்தில் ஏதோ வளையம் போல அது இருந்துள்ளது.

பொதுவாக சினிமாக்களில் ஏலியன்கள் வரும் ஸ்பேஸ் ஷிப்கள் வட்டமாகவே இருக்கும். எனவே, அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்று சிலர் நினைத்து அஞ்சினர். மேலும், அதன் அருகே யாராலும் செல்ல முடியவில்லை. அந்தளவுக்கு அது சூடாக இருந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகக் கென்யா விண்வெளி நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குப் புறப்பட்டனர்.
கலர் மாறிய ரிங்:
இது ஒரு பக்கம் இருக்கச் சிவப்பு நிறத்தில் இருந்த அந்த ரிங் மெல்ல நிறம் மாற தொடங்கியுள்ளது. அது மெல்ல அப்படியே சில்வர் கலருக்கு மாறியது. அதன் வெப்பமும் குறையத் தொடங்கியது. அதற்குள் அதிகாரிகள் அங்கு வந்துவிட்டனர். விண்வெளியில் இருந்து வந்து விழுந்த இந்த மர்ம பொருளை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கென்யா விண்வெளி நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
500 கிலோ எடை:
அதில் கென்யாவின் மகுவேனியின் தெற்கு மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான முக்குகு (Mukuku) என்ற இடத்தில் விழுந்த பொருளைக் கென்யா விண்வெளி நிறுவனம் இப்போது ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2.5 மீட்டர் (சுமார் 8 அடி) அகலம் கொண்ட இந்த ரிங். சுமார் 500 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இது விண்வெளியில் சுற்றி வந்த பொருளின் ஒரு பகுதி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளக்கம்:
ராக்கெட்டில் இருந்து ஏவுகணையைப் பிரிக்கும் இடத்தில் இதுபோன்ற ரிங் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அது வானில் இருந்து அதீத வேகத்தில் வந்ததால் தான் அது சிவப்பு நிறத்தில் மாறியிருக்கிறது. அதன் வெப்பம் குறைந்ததும் அது வழக்கமான நிறத்திற்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. இதை ஆய்வாளர்கள் விண்வெளிக் குப்பை எனக் குறிப்பிடுகிறார்கள். விண்வெளிக் குப்பைகள் மணிக்கு சுமார் 36 ஆயிரம் கிமீ வேகத்தில் பூமியில் வந்து விழும். இது மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் விழுந்தால் பேரழிவு ஏற்படும். ஏற்கனவே கடந்த காலங்களில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்களும், சீன ராக்கெட்களின் பகுதிகளும் இதுபோல பூமியில் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications