ஓமனில் 22 வயது இந்தியப் பெண் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
ஓமன்: அரேபிய வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் 22 வயது இந்தியப் பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமனின் கோர் ஃபக்கான் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து உள்ளூர் போலீசாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர அழைப்பு வந்தது. கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட அடையாளத்துடன் 22 வயது இளம் பெண்ணின் சடலம் ஒன்று தங்களது மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அந்த இளம் பெண்ணின் சாவின் பிண்ணனியில் உள்ள மர்ம முடிச்சு விடுபடும் என கோர் ஃபக்கான் போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அந்த பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.
'எனது மகள் எதற்காக தூக்கு மாட்டிக் கொண்டாள் என்பது எனக்கு புரியவில்லை. என் வீட்டின் வாசலில் அவள் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துப் போனேன்' என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications