திருடிய களைப்பில் ஹவுஸ் ஓனருடன் தூங்கி.. கிளம்பும்போது "கிஸ்" கொடுத்து மாட்டிய திருடன்!!
நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டில் திருட வந்த திருடன், திருடிய பின் உரிமையாளர்களுடன் படுத்துத் தூங்கி சிக்கியுள்ளார்.
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட் லேண்ட் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் டீன் டெபியூடிஸ் (35). கொள்ளையடிப்பதைத் தொழிலாகக் கொண்ட ரிச்சர்ட், சம்பவத்தன்று இரவு போர்ட் லேண்டில் உள்ள வீடொன்றில் திருடச் சென்றுள்ளார்.

வீட்டின் ஒவ்வொரு அறையாக ஓடியாடி விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்த ரிச்சர்ட்டுக்கு களைப்பு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பிய ரிச்சர்ட், வீட்டு உரிமையாளரின் படுக்கை அறைக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே, வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருக்க ரிச்சர்ட்டும் அவர்களுடன் சேர்ந்து கட்டிலில் தூங்கியுள்ளார்.
ஆடைகளை கழற்றி வைத்து விட்டு நிர்வாணமாக தூங்கிய ரிச்சர்ட், பாதுகாப்பிற்காக கத்தியை மட்டும் தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கியுள்ளார். சிறிது நேரம் தூங்கி எழுந்த பின், புறப்படத் தயாரான ரிச்சர்ட் தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இதில் திடுக்கிட்டு விழித்த அந்நபர் திருடனைப் பார்த்து பயத்தில் அலறியுள்ளார். பின் தன்னிடமிருந்த துப்பாக்கியால் ரிச்சர்ட்டை நோக்கி சுட்டுள்ளார். ஆனால், காயம் படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார் ரிச்சர்ட்.
இந்த சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு வேறொரு வீட்டில் கொள்ளையடித்த போது போலீசில் சிக்கினார் ரிச்சர்ட். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மேற்கூறிய தகவல்களை அவன் தெரிவித்துள்ளார். தற்போது ரிச்சர்ட்டை கைது செய்த போலீசார், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications