மானத்தை விட லேப்டாப் முக்கியம்.. பன்றிகளைத் துரத்திக் கொண்டு நிர்வாணமாக ஓடிய இயற்கை ஆர்வலர் !
ஜெர்மனியில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பெர்லின்: ஜெர்மனி நாட்டில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஜெர்மனி நாட்டில் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களில் பலர் 'ஃப்ரீ பாடி கல்ச்சர்' (Free body Culture), எனும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த கொள்கை உடையவர்கள், கோடை காலங்களில் ஆடை ஏதும் அணியாமல் பிறந்தமேனியாக கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் காற்று வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனை இயற்கைக்கு திரும்புதல் என பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள் அவர்கள்.

அப்படிப்பட்ட கொள்கையுடைய இயற்கை ஆர்வலர் ஒருவர் பெர்லின் நகரில் உள்ள ஒரு பிரபலமான பூங்காவில் நிர்வாணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டு பன்றியும், அதன் இரு குட்டிகளும், அந்த இயற்கை ஆர்வலரின் மடிக்கணினி பையை நைசாக கவ்விக்கொண்டு ஓடின.
இதைபார்த்து அதிர்ந்து போன அவர், அந்த பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாணக் கோலத்தில் பூங்கா முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடினார். கடைசியாக பலமாக ஒரு குரல் கொடுத்ததும் அந்த பன்றிகள் மடிக்கணினி பையை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டன.

இந்தக் காட்சிகளை அங்கிருந்த பிரபல ஜெர்மன் நடிகை அடெல் லாண்டர் புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துவிட்டார். சம்பந்தப்பட்ட இயற்கை ஆர்வலரின் அனுமதியோடு தான் இந்த புகைப்படங்களை பகிர்ந்ததாக அவர் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications