நமஸ்தே ஏலியன்ஸ்... ஹ்ரித்திக்கின் ‘கொய் மில் கயா’ திட்டத்தைக் காப்பியடித்த நாசா!
நாசா: வேற்றுக்கிரகவாசிகள் குறித்த தேடும் படலம் தொடர்ந்தபடிதான் உள்ளது. இந்த நிலையில் வேற்றுக்கிரகவாசிகளுக்கு நாசா அனுப்பியுள்ள ஒரு செய்தியில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் இடம் பெற்றுள்ளது சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. ஆனால், இந்த மொழிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் இடம் பெறவில்லை.
இந்த நேரத்தில் நமக்கு ஒரு இந்திப் படம் ஞாபகத்திற்கு வருகிறது. கொய் மில் கயா படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், வேற்றுக் கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார். இந்தியில்தான் பேசியிருப்பார் அதில்.
இதை நாசா எப்படியோ மோப்பம் பிடித்து விட்டது போலும். அதே இந்தியை வைத்து வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்திலோ என்னவோ இந்தியிலும் வேற்றுகிரகவாசிகளுக்கு வாசகத்தை அது அனுப்பியுள்ளது.

ஆடியோ பதிவு...
வேற்றுகிரகவாசிகள் யாரேனும் இருந்தால் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள வசதியாக ஆடியோ பதிவை நாசா அனுப்பி வைத்து விண்வெளியில் உலவ விட்டுள்ளது.
55 மொழிகள்...
அதில் 55 மொழிகளில் இடம் பெற்ற பேச்சுக்கள் (இந்தி, தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி உள்பட), பல்வேறு நாட்டுக் கலாச்சாரம், சம்பவங்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
சவுன்ட்கிளவுட்...
இதை சவுன்ட்கிளவுடில் நாம் தற்போது கேட்க முடியும். அத்தனை சத்தத்தையும் நம்மால் கேட்க முடியும். முழுத் தொகுப்பும் சவுன்ட்கிளவுடில் இடம் பெற்றுள்ளது.

வாயேஜர் விண்கலம்...
இந்த தகவல்களைகடந்த 1977ம் ஆண்டு அமெரி்கா அனுப்பிய வாயேஜர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. இதில் மழையின் சத்தம், ஒரு தாய், குழந்தையின் சத்தம் உள்ளிட்ட பலவும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் இல்லை...
ஆனால், இந்த 55 மொழிகளில் செம்மொழியான நமது தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யார் சொன்னாங்க பாஸ்...
வேற்றுக் கிரகவாசிகள் நம்ம ஊர் பாஷைதான் பேசுவார்கள் என்று எந்த புத்திசாலி நாசாவுக்குச் சொன்னார் என்பதுதான் புரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications