டென்னசி தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.. நடிகர் நெப்போலியன் வாழ்த்து!
நேஷ்வில்(யு.எஸ்): டென்னசி தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் நெப்போலியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டென்னசி மாநிலத்தின் தலைநகரமான நேஷ்வில் நகரில் கடந்த 34 ஆண்டுகளாக டென்னசி தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடிகர் நெப்போலியனின் ஜீவன் டெக்னாலஜி அலுவலகத்தில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தில் சங்க ஆலோசகர்கள், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவைக்கான பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டர்களுடன் முன்னாள் தலைவர்கள் டாக்டர் தெய்வ நாயகம், பால சுந்தரம், செந்தில் நாதன், சுந்தரமூர்த்தி, முனிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் சிவராமன் கங்காதரன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக முத்தையா நடராஜன், செயலாளராக சபாபதி சதாசிவம், துணைச் செயலாளராக பிரகாஷ் செல்வராஜ், பொருளாளராக தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போதைய நிர்வாகிகள் ராஜ்குமார் சுபாஷ், கோபி சுந்தரேசன், ராஜாராம் பழனிசாமி, சீதாராமன் ராஜேந்திரன் பொறுப்புகளை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். அடுத்து வரும் பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியனையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நேஷ்வில் நகரில் வசித்துவரும் நடிகர் நெப்போலியன் டென்னசி தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு தனி அக்கறையுடன் உறுதுணையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications