3 கால்பந்து மைதானம் சைஸ் கொண்ட விண்கல்.. இன்று பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! நாசா எச்சரிக்கை
வாஷிங்டன்: விண்கற்காலால் பூமிக்கு பெரும் ஆபத்து காத்திருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், சுமார் 1000 அடி சைஸ் கொண்ட விண்கல் ஒன்று இன்று பூமியை நெருங்குவதாகவும், இது பூமி மீது மோதவும் வாய்ப்பு இருப்பதாகவும் நாசா எச்சரித்திருக்கிறது.
2003 MH4 என்று பெயரிடப்பட்ட என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல், விநாடிக்கு 14,000 வேகத்தில் பூமியை கடந்து செல்கிறது.

பூமியிலிருந்து சுமார் 70 லட்சம் கி.மீ தொலைவில் இந்த விண்கல் பறக்கிறது. பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தொலைவை விட 17 மடங்கு தூரம்தான் 70 லட்சம் கி.மீ என்பது. இது ரொம்ப தூரமாச்சே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், விண்வெளியை பொறுத்தவரை இது ரொம்ப குறைவான தூரம். நமக்கு பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகம் 2 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. அப்படி எனில், 70 லட்சம் என்பது எவ்வளவு குறைவான தூரம் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
எனவேதான் இந்த விண்கல் பூமிக்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் அச்சமடைந்திருக்கிறார்கள். இந்த விண்கல் PHA வகையை சார்ந்ததாகும். அதாவது பூமியிலிருந்து 75 லட்சம் கி.மீ தொலைவுக்குள் வரும் விண்கற்களை PHA என்று வகைப்படுத்துவார்கள். இந்த வகை விண்கற்கள் பூமிக்கு ஆபத்தானவை. அப்படியெனில் பூமியை மோதுமா? என்றால் கிடையாது. ஆனால் இந்த விண்கற்களின் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட அது பூமியை தாக்க கூடும். இந்த வகை விண்கற்கள்தான் PHA என அழைக்கப்படுகிறது.
இப்போது பூமியை நெருங்கும் 2003 MH4 விண்கல், எதிர்பாராமல் பூமி மீது மோதினால், ஆயிரம் அணு குண்டு வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கல் விழுந்த இடத்தில் சுமார் 5-10 கி.மீ விட்டம் கொண்ட பெரும் பள்ளம் உருவாகும். நகரங்கள் மீது இந்த விண்கல் விழுந்தால் மொத்த நகரமும் அழிந்துவிடும். உதாரணத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு வெறும் 20மீ அளவு கொண்ட 'செல்யாபின்ஸ்க்' எனும் விண்கல் பூமியை தாக்கியது. இதில் 1500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இப்போதுள்ள 2003 MH4 விண்கல் ஒரு நாட்டையே அழிக்கக்கூடும். கடலில் விழுந்தால் சுனாமி ஏற்படும். காடுகளில் விழுந்தால் காட்டு தீயை ஏற்படுத்தும். அதேபோல எரிமலை வெடிப்பையும் ஏற்படுத்தும். இது எல்லாம் சேர்ந்து, பூமியில் புகைமூட்டத்தை ஏற்படுத்தும். இதனால், சூரிய ஒளி உள்ளே வராது. குளிர்காலம் உருவாகலாம். மனித இனம் பணி காலத்தில் சிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம். இந்த கல் பூமியை தாக்குகிறதா? இல்லையா என.












Click it and Unblock the Notifications