2025 - நாசா போடும் பக்கா ப்ளான்! ஸ்பேஸ் எக்ஸ், அமேசானுடன் கூட்டு... இனி எல்லாமே சாட்டிலைட்தான்
அமெரிக்கா: பூமிக்கு அருகாமையில் விண்வெளி ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க 6 அமெரிக்க சாட்டிலைட் நிறுவனங்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், புவியியல், சூரியன், சந்திரன், கிரகங்கள், விண்வெளி, கோள்கள், துணை கோள்கள், பால்வெளி, பிரபஞ்சம் தொடர்பாக பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கி வருகிறது.
அந்தவகையில் பூமிக்கு அருகாமையில் விண்வெளி ஆய்வுப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு அடுத்தடுத்து புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

புவிக்கு அருகே விண்வெளி ஆய்வு
அந்த வகையில்தான், எதிர்கால பணிகளுக்கு உதவும் வகையில் பூமிக்கு அருகேயுள்ள விண்வெளி தகவல் தொடர்பு சேவை கண்டுபிடிப்புகளை உருவாக்க தொடங்கி இருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பூமிக்கு அருகாமையில் விண்வெளியில் நடக்கும் விண்வெளி ஆய்வுகளுக்கு தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் தொலை தொடர்பு சேவைகளை பயன்படுத்துவது குறித்து நாசா மதிப்பீடு செய்து வருகிறது.

எவ்வளவு செலவு?
இதன் மூலமாக நாசாவால் விண்வெளி குறித்து இன்னும் ஆழமான ஆய்வையும், விண்வெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத வளங்களையும் கண்டறிய இயலும் என்று நம்பப்படுகிறது. நாசாவின் இந்த திட்டத்திற்காக 278.5 மில்லியன் டாலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன. 5 ஆண்டுகளில் இந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்கள்?
இந்த திட்டத்தில் நாசாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய செயற்கைக்கோள் தொலை தொடர்பு நிறுவனம் ஒவ்வொன்றும் குறைந்த அளவிலான தொகையை முன்வைத்து தங்களின் திட்டங்களை அறிமுகம் செய்தன. இதில் குறைவான செலவில் சிறப்பான திட்டங்களுடன் வந்த இம்மர்சாட், குய்பெர், எஸ்.இ.எஸ்., ஸ்பேஸ் எக்ஸ், டெலிசாட், வியாசாட் ஆகிய நிறுவனங்களை நாசா தேர்வு செய்துள்ளது.

நிதி ஒதுக்கீடு
இதில், இம்மர்சாட் நிறுவனம் முன்வைத்த திட்டத்திற்காக 28.6 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், எஸ்.இ.எஸ். நிறுவனத்தின் திட்டத்திற்காக 28.96 அமெரிக்க டாலர்களையும், டெலிசாட் நிறுவனம் கொண்டு வந்த திட்டத்திற்காக 30.65 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வியாசாட் நிறுவனத்தின் திட்டத்திற்காக 53.3 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் நாசா ஒதுக்கி இருக்கிறது.

அமேசான், ஸ்பேஸ் எக்ஸ்
இதில், அதிகபட்சமாக விண்வெளித் துறையில் கொடிகட்டிப் பறக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு 69.95 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா ஒதுக்கியுள்ளது. அதேபோல் மற்றொரு நிறுவனமான அமேசானின் குய்பெர் நிறுவனத்துக்கு 67 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் நாசா நிதியாக ஒதுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

2025 திட்டம்
இரு நிறுவனங்களின் அதிபர்களுமே தங்கள் நிறுவன ஏவுகணை மூலம் பூமிக்கு அருகாமையில் விண்வெளிக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் தங்கள் திட்டங்களை முடிக்க வேண்டும் என்றும், வலுவான, நம்பிக்கைக்குரிய, செலவு குறைவான, இருவழி பயணம் மேற்கொள்ளும் வகையில் அவை இருக்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications