100 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்தது நாசாவின் கெப்ளர் விண்கலம்!
நியூயார்க்: விண்வெளியில் 100க்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட இப்போது இவற்றில் பல வித்தியாசமாக தோன்றுவதையும் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின்படி, இவற்றில் பல கிரகங்களின் சூரியன்கள் மிக மிக பிரகாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. முன்பு கணித்ததை விட மிக சூடாகவும் இவை உள்ளனவாம்.
3 கிரகங்கள், நமது பூமியை விட மிகப் பெரியதாக உள்ளன. ஒரு கிரகமானது, ஹையடஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்திற்கு மத்தியில் உள்ளது. இந்த ஹையடஸ் நட்சத்திரக் கூட்டமானது, பூமிக்கு மிக நெருக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டமாகும்.

இன்னொரு கிரகமானது, குள்ள நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.
இது போக மேலும் 243 கிரகங்கள் குறித்த தகவல்களையும் கெப்ளர் விண்கலம் அனுப்பியுள்ளது. அவை இன்னும் ஆய்வில் உள்ளதாக ஹார்வார்ட் ஸ்மித்சானியன் அஸ்ட்ரோ பிசிக்ஸ் மையத்தின் ஆண்ட்ரூ வான்டர்பர்க் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு அறியப்பட்ட பல புதிய கிரகங்கள் குறித்த புதிய தகவல்களையும் கெப்ளர் அனுப்பியுள்ளதாம். தொடர்ந்து அவை குறித்த விரிவான ஆய்விலும் கெப்ளர் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் கெப்ளர் விண்கலம் கிரகங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அன்று முதல் 2013ம் ஆண்டு வரை அது 1000க்கும் மேற்பட்ட கிரகங்கள் குறித்த தகவல்களை நமக்கு அளித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நெப்ட்யூன் கிரகத்தை கிட்டத்தட்ட 70 நாட்கள் கெப்ளர் ஆராய்ந்தது.
மேலும் நமது பூமியைப் போல ஒரு புதிய கிரகம் இருப்பதையும் கெப்ளர்தான் நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பூமியானது நமது பூமியை விட பெரியது. அதேபோல அந்த கிரகம் சுற்றி வரும் சூரியன் நமது சூரியனை விட மிகப் பிரகாசமானது, அழியும் நிலையில் உள்ளதையும் கெப்ளர் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications