நிலவின் துகளை நாசா என்னிடமிருந்து அபகரிக்க பார்க்கிறது.. வழக்கு தொடுத்து பகீர் கிளப்பிய பெண்
தன்னிடம் இருக்கும் நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது என்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
Recommended Video

நியூயார்க்: தன்னிடம் இருக்கும் நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது என்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா என்ற பெண் நியூயார்க் நீதி மன்றத்தில் நாசாவிற்கு எதிராக இந்த வழக்கை தொடுத்துள்ளார். அவர் தன்னிடம் நிலவின் பாகங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
நாசா எப்போதும் மக்களிடம் இருந்து பொருட்களை அபகரிப்பது போல தன்னிடம் இருந்து பொருட்களை அபகரிக்க இருப்பதாக கூறியுள்ளார். அவர் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்
ஜூலை 20, 1969, உலகம் அதுவரை காணாத பெரிய அதிசயத்தை கண்டது. அதுவரை ஆகாயத்தை பார்த்து கதை சொல்லிக்கொண்டு இருந்த மனிதன், முதல் முதலாக தன்னுடைய வரலாற்று கதையை எழுதினான். நிலவில் அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்க், பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் தன்னுடைய கால்களை பதித்தனர். அப்போலோ 11 மூலம் அவர் தரையிறங்கினார்கள்.

பரிசு கொடுத்தனர்
இந்த நிலையில் பூமிக்கு திரும்பி வந்த ஆம்ஸ்ட்ராங்க், நிலவில் இருந்து எடுத்து வந்த சில துகள்களை, சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா பெண்ணின் அப்பாவிற்கு பரிசளித்துள்ளார். 1970 வாக்கில் அவர் இந்த பரிசை அளித்துள்ளார். அப்போதில் இருந்து நிலவின் துகள்கள் அந்த பெண்ணிடம்தான் இருந்துள்ளது.

கேட்டார்கள்
இதேபோல் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பொருட்களை சிலர் பரிசாக சிலருக்கு அளித்துள்ளனர். இந்த பொருட்களை எல்லாம் நாசா கைப்பற்றி வருகிறது. நாசா உருவாக்கும் அருங்காட்சியகத்தில் இந்த பொருட்களை வைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக பலரிடம் வழக்கு தொடுத்து பொருட்களை கைப்பற்றியுள்ளனர். சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்காவிடமும் அவர்கள் பொருட்களை கேட்டுள்ளனர்.

மறுப்பு வழக்கு
இதற்கு லாரா சிக்கா மறுப்பு தெரிவித்துள்ளார். நிலவு என்பது நாசாவின் சொத்து கிடையாது என்றுள்ளார். அது தன் தந்தைக்கு, ஆம்ஸ்ட்ராங்க் கொடுத்த பரிசு. அது தனிநபர் சொத்து அதை நாசா கேட்க முடியாது என்றுள்ளார். இதனால் நிலவின் துகளை கைப்பற்ற முடியாமல் நாசா குழம்பி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications