ப்ளூட்டோவின் "இதயத்தில்" இன்னொரு மலைத் தொடர்- கண்டுபிடித்தது நியூ ஹாரிஸான்ஸ்
வாஷிங்டன்: நாசாவின் நியூஹாரிஸான்ஸ் விண்கலம் அனுப்பியுள்ள ஒரு படத்தில் ப்ளூட்டோவின் இதயம் போன்ற பகுதியில் உள்ள இன்னொரு மலைத் தொடர் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மலைத் தொடர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இது 2வது மலைத் தொடராகும்.
நன்கு பிரகாசமாக இந்த மலைத் தொடர் தெரிகிறது. ப்ளூட்டோவின் இடது புறம் கீழே இந்த மலைப்பகுதி உள்ளது.
அதிகம் உயரம் கொண்டதாக இந்த மலைத் தொடர் இல்லை. ப்ளூட்டோவின் தென் மேற்கில் உள்ள டோம்பாக் ரெஜியோ என்ற பகுதியில் இந்த மலைத் தொடர் காணப்பட்டுள்ளது.

பனி மலை தான்..
இதுவும் பனி மலைதான். இதன் உயரம் 1.5 கிலோமீட்டர் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அப்பாலச்சியான் மலைத் தொடரின் அளவில் தான் இதுவும் இருக்கிறதாம்.

ஸ்புட்னிக் பிளானம்...
ப்ளூட்டோவல் உள்ள இதயம் போன்ற பகுதிக்கு ஸ்புட்னிக் பிளானம் என்று பெயரிட்டுள்ளனர். பிளானம் என்பது சமவெளியாகும். இங்குதான் இந்த மலைத் தொடர் உள்ளது.

வடமேற்கில்...
பனி சூழ்ந்த நார்கே மாண்டிஸ் என்ற மலைத் தொடருக்கு 110 கிலோமீட்டர் வட மேற்கில் இந்த புதிய மலைத் தொடர் உள்ளது. ஜூலை 15ம் தேதி இந்த மலை கண்டுபிடிக்கப்ட்டது.

இளமையான மலை...
மிகவும் அழகிய மலைத் தொடராக இது இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த மலையும் மற்றவை போலவே இளமையாக இருக்கிறது.

பனி படர்ந்து...
புதிதாக உருவானது போல பனி படர்ந்து காணப்படுகிறது. மிகவும் உருகிப் போன நிலையில் இங்கு பனிகள் உள்ளன.

ஆய்வுகள்...
இதயம் போன்ற ப்ளூட்டோவின் இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அங்கு என்னவெல்லாம் உள்ளன என்பதை அறிய முயற்சிகள் நடந்து வருகின்றன.

100 மில்லியன் வருடங்கள்...
இந்தப் பகுதியானது கிட்டத்தட்ட 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறாரக்ள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications