செவ்வாயில் மறைந்த காற்று... விரைவில் ‘மெவென்’ மூலம் மர்மம் விலகும்: நாசா நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செவ்வாய்க் கிரகத்தில் காற்று மறைந்ததன் மர்மம் என்ன என்பதற்கு விரைவில் நாசா அனுப்ப உள்ள விண்கலம் மூலம் விடை கிடைக்கப் பெறலாம் என நம்பப் படுகிறது.

வான்வெளி மண்டலம் மற்றும் கிரகங்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது நாசா. அந்தவகையில், செவ்வாய் கிரகத்தை ஆராய தனது அடுத்த விண்கலத்தை விரைவில் அனுப்ப திட்டமிட்டுள்ளது நாசா.

கிட்டத்தட்ட ஒருவருடம் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய உள்ள இந்த விண்கலம் செவ்வாய் குறித்தான மேலும் பல ரகசியங்களை பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.

செவ்வாய் கிரகம்...

செவ்வாய் கிரகம்...

சூரியமண்டலத்தின் 4வது கோளான பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ள மற்றொரு கோள் செவ்வாய் கிரகம். 400 கோடி வருடங்களுக்கு மேலான வயதுடைய இந்த செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய விண்கலம்....

புதிய விண்கலம்....

அந்தவகையில், நாசா ஏற்கனவே செவ்வாய் கிரகம் குறித்து ஆராய இரண்டு விண்கலங்களை அனுப்பியுள்ளது. அவற்றின் ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில் விரைவில் மற்றொரு விண்கலத்தை அனுப்ப உள்ளது நாசா.

மாவென்....

மாவென்....

‘மாவென்' எனப் பெயரிடப் பட்டுள்ள அந்த விண்கலத்தை கேப் கெனாவரெல் ஏவுதளத்தில் இருந்து ஏவ நாசா தயாராகி வருகிறது. இது கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்கு பிறகு, செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடையும்.

ஒரு வருட காலம்....

ஒரு வருட காலம்....

ஒரு பள்ளிப் பேருந்து அளவில் உள்ள இந்த ‘மாவென்', ஒரு வருட காலத்திற்கு செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்து, அங்குள்ள வளிமண்டலத்தின் மாறுதல்கள் குறித்து ஆராய்ந்து விவரங்கள் அனுப்பி வைக்கும் எனத் தெரிகிறது.

செவ்வாய் ரகசியங்கள்...

செவ்வாய் ரகசியங்கள்...

இதற்கு முன்னர், தண்ணீர் இருப்பதாக நம்பப்பட்ட இந்த இளம் செவ்வாய் கிரகத்தில் தற்போது கார்பன் டை ஆக்ஸைடுடன் கூடிய காற்று இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தை வெப்பம் மற்றும் ஈரமாகவும் வைத்திருக்க உதவுவதாகவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் மாவென் மேலும் பல புதிய தகவல்களை அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+