அந்த நீலப்புள்ளிதான் பூமி.. சிவப்பா தெரியுதே அதுதாம்ப்பா மார்ஸ்... 'வாவ்' நாசா!
வாஷிங்டன்: பூமி மற்றும் சனி கிரகத்தின் அதிர வைக்கும் புதிய படங்களை நாசா வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனி கிரகத்தின் இயற்கை வண்ணத்திலான புகைப்படம் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தப் படத்தில் சனி கிரகத்தின் ஏழு நிலவுகள் மற்றும் வளையங்களைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
மேலும் பூமி, வீனஸ், செவ்வாய் ஆகியவையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. நாசாவின் காசினி விண்கலம் இந்தப் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.

வாஷிங்டனில் வெளியீடு
வாஷிங்டனில் உள்ள நியூசம் அரங்கில் இந்த படங்களை நாசா வெளியிட்டு விளக்கியது.

141 வைட் ஆங்கிள் படங்கள்
காசினி விண்கலத்தின் புகைப்பட குழுவினர் 141 வைட் ஆங்கிள் படங்களை பிராசஸ் செய்துள்ளனர்.

6,51,591 கிலோமீட்டருக்கு அப்பால்
6,51,591 கிலோமீட்டருக்கு அப்பால் சனிக் கிரகத்தையும், அதன் நிலவுகளையும், சனி கிரகத்தின் வளையங்களையும் காசினி விண்கலம் மிக அற்புதமாக படம் பிடித்துள்ளது. சனி கிரகத்தின் 2வது ஆழ்ந்த உட்புற வளையமான இ வளையத்தையும் தெளிவாகப் படம் பிடித்துள்ளது காசினி.

அடேங்கப்பா இ வளையம்...
இந்த இ வளையத்தின் தொலைவை புரியும்படி சொல்ல வேண்டுமானால், பூமியையும், நம்முடைய நிலவையும், இந்த இ வளையத்திற்குள் அடைத்து விட முடியும். அவ்வளவு பெரியது இந்த வளையம்.

இன்டர்நெட்டில் வெளியீடு
சனி கிரகத்தின் அழகை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது நாசா.

பூமி எங்கப்பா இருக்கு...
இந்தப் படத்தில் சனி கிரகத்தின் கீழே வலது புறம் பூமியைப் பார்க்கலாம். ஒரு நீல நிறப் புள்ளி தெரியும்.. அதுதான் பூமி.

சனிக்கு மேலே வீனஸ்
வீனஸ் கிரகமானது, சனி கிரகத்திற்கு மேலே இடதுபுறம் தெரியும் பிரகாசமான புள்ளி ஆகும்.

மங்கலா சிவப்பா தெரியுதே.. அதாம்ப்பா செவ்வாய்
அதேபோல மங்கலாக, சிவப்பு நிறத்தில் தெரியும் புள்ளிதான் நாம் அத்தனை பேரும் கனவு கண்டு கொண்டிருக்கும் செவ்வாய் கிரகம். வீனஸுக்கு இடதுபுறம் இதைப் பார்க்கலாம்.

ஏழு சனி நிலவுகள்
சனி கிரகத்தின் ஏழு நிலவுகளையும் கூட தெளிவாகப் பார்க்க முடிகிறது.
பார்க்கவே திரில்லாக இருக்கிறது... பார்த்து ரசியுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications