பூமி மீது மோதும் விண்கற்கள்! ஆபத்தை தவிர்க்க நாசா வைத்திருக்கும் பெரிய பிளான்
வாஷிங்டன்: நமது சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க நாசா பெரிய திட்டத்தை வைத்திருக்கிறது.
தன்னுடைய திட்டம், அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து நாசா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது.

அதில் விண்கற்கள் மோதலை எதிர்கொள்ள 3 நடவடிக்கைகளை பின்பற்றுவதாக குறிப்பிட்டிருக்கிறது. இதன் மூலம் விண்கல் மோதலிலிருந்து பூமியை பாதுகாக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
1. கண்டறிதல்
2. கண்காணித்தல்
3. தேவைப்பட்டால் திசை மாற்றல்
முதலில் எந்த விண்கல் பூமியை நோக்கி வருகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அந்த விண்கல் அளவு என்ன? எங்கிருந்து வருகிறது? எப்போது பூமியை மோதும் என்பதை கணக்கீடு செய்ய வேண்டும். மோதால் பூமியில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கணிக்க வேண்டும். குறிப்பாக விண்கல் எந்த பகுதியை தாக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதன் பின்னர் விண்கல்லின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும். கல் எந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதன் பாதையில் மாற்றம் ஏற்படுமா? கல்லின் தன்மை என்ன? பூமிக்கும் கல்லுக்கும் இடையேயான தூரம் எவ்வளவு குறைந்து வருகிறது? பூமியின் ஈர்ப்பு விசை எப்படி இந்த கல்லை பாதிக்கும்? என்பதை பற்றி அறிந்திருக்க வேண்டும்.
கடைசியாக எல்லாம் உறுதியாகிவிட்டது. விண்கல் நிச்சயம் பூமியை தாக்கும் என்பதை உறுதி செய்த பிறகு, தேவையெனில் அந்த விண்கல்லின் பாதையை மாற்ற வேண்டும். இதற்காக நாசா DRAT என்கிற மிஷனை முயன்று பார்த்திருக்கிறது. இந்த மிஷன்படி, விண்கல்லில் ஒரு விண்கல்லை இறக்கி, அந்த விண்கல்லின் தன்மை பற்றி ஆய்வு செய்திருக்கிறது. இருப்பினும் இந்த மிஷன் மூலம் விண்கல்லின் பாதையை மாற்ற முடியுமா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
இன்றைய தேதியில் சுமார் 30,000 விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக இருக்கின்றன. இதில் நாம் அடையாளம் காணாதது இன்னும் பல இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவற்றில் எது எப்போது பூமியை மோதும் என்பதை ஓரளவுதான் கணிக்க முடியும். இருப்பினும் இந்த பணியை நாசா சிறப்பாக செய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
-
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
'அவசர' ஆலோசனை.. ஹோட்டல்களைக் காப்பாற்றுமா தமிழக அரசு? நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன? -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல்












Click it and Unblock the Notifications