For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடா... விண்வெளியிலும் ‘அதே’ பிரச்சினை... 3 லிட்டர் "மூச்சா" பந்து போல் திரண்டதாக கெல்லி புகார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு மைய கழிப்பறையில் சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார்.

பூமிக்கு மேலே மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தங்கி விண்வெளி வீரர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்தவகையில் விண்வெளியில் நீண்ட நாள்கள் தங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஸ்காட் கெல்லி.

தொடர்ந்து விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு நடத்தி வரும் ஸ்காட், ரெட்டிட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் வாயிலாக என்னிடம் எதையும் கேளுங்கள் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

NASA's Scott Kelly snaps blizzard from space, shares 'toilet issues' with Reddit users

அப்போது அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், ஒருவர், சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அருவருப்பான அனுபவம் பற்றிக் கூறுங்கள்' எனக் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த ஸ்காட் கெல்லி, ‘சமீபத்தில் எங்களது கழிப்பறையில், 3 லிட்டருக்கு மேல் சிறுநீரும், அமிலமும் பந்து போல திரண்டு மிதந்து கொண்டிருந்தது. அதை சுத்தம் செய்தேன். கழிவைப் போக்கும் இயந்திரம் அடைத்து கொள்ளாதிருக்க அமிலம் கலக்கப்படுகிறது' எனப் பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில் அனைவருக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவது குறித்த திட்டத்தில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. பொது இடங்களில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பூமியில் தான் கழிப்பறை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றால், விண்வெளியும் அதற்கு சளைத்ததில்லை என ஸ்காட் கெல்லியின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.

English summary
NASA astronaut Scott Kelly has been living aboard the International Space Station since March of last year and recently just passed 300 days in space. During his Reddit chat he also answered a range of questions from the serious to the silly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X