10 நாளில் 2400 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா.. தீயாக வேலை செய்யும் டெஸ் சாட்டிலைட்!

நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் நிறைய கிரகங்கள் இருக்கிறது என்று நாசா இதன் மூலம் கண்டுபிடித்துள்ளது.

இதை அனுப்புவதற்காக 337 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. வானத்தில் உள்ள 85 சதவிகித பகுதிகளை இது ஸ்கேன் செய்யும். டெஸ் சாட்டிலைட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது.

இதில் சிறிய கேமராக்கள் நான்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. வெவ்வேறு திசைகளில் இந்த கேமரா வைக்கப்பட்டு இருக்கும் . இதன் அளவும் செண்டிமீட்டர் கணக்கில்தான் இருக்கும். இதன் மூலமே இது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது.

ஸ்கேன்

ஸ்கேன்

இந்த டெஸ் சாட்டிலைட் வானத்தில் இருக்கும் சிறு சிறு கிரகங்களை எல்லாம் ஸ்கேன் செய்கிறது. மொத்தமாக சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் 20,000 கிரகங்களை ஸ்கேன் செய்யும். இதில் 50 கிரகங்கள் பூமியின் அளவில் உள்ளது. 500 கிரகங்கள் பூமியை விட சிறிய அளவில் இருக்கும். மற்ற கிரகங்கள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும்.

சூப்பர் கண்டுபிடிப்பு

சூப்பர் கண்டுபிடிப்பு

தற்போது இந்த டெஸ் சாட்டிலைட் வெறும் 10 நாளில் 2,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. இது நாசா நினைத்ததை விட மிகவும் அதிக வேகம் என்று கூறப்படுகிறது. இது ஆராய்ச்சி செய்த தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பிவிடுகிறது. இதே வேகத்தில் இந்த சாட்டிலைட் ஆராய்ச்சி செய்தால் வெறும் 100 நாளில் 20,000 கிரகங்களை கண்டுபிடிக்க முடியும் என்று நாசா கூறியுள்ளது.

எல்லாம் மாறியது

எல்லாம் மாறியது

இதுவரை மனிதர்கள் வேற்று கிரகங்கள் குறித்து நினைத்து வைத்திருந்த எல்லா விதிகளையும் இந்த சாட்டிலைட் மாற்றியுள்ளது என்று நாசா கூறியுள்ளது. எங்கெல்லாம் கிரகங்கள் இருக்காது என்று நினைத்தார்களோ அங்கு கூட, புதிய வளம் கொண்ட கிரகங்கள் இருக்கிறது என்று நாசா கூறியுள்ளது. இது மனித வரலாற்றில் பெரிய புரட்சியாகும். இன்னும் இது பல லட்சம் கிலோ மீட்டர் பயணிக்க இருக்கிறது என்பதால், இன்னும் பல முக்கிய விஷயங்களை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

ஏலியன்கள்

ஏலியன்கள்

இந்த சாட்டிலைட் அனுப்பியதற்கு ஏலியன்களும் ஒரு காரணம். ஆம் எங்காவது ஏலியன்கள் இருக்கிறார்களா என்று கண்டுபிடிப்பதற்கு இந்த சாட்டிலைட் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 2,400 கிரகங்களில் எந்த ஏலியன்களும் இல்லை. இன்னும் 18,000 கிரகங்கள் என்ன புதிரை வைத்து இருக்கிறதோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+