செவ்வாயில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்யும் இன்சைட் ரோபோ.. வெற்றிகரமாக ஏவி நாசா சாதனை
செவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற ரோபோட்டை அனுப்பி உள்ளது.
Recommended Video

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற ரோபோட்டை அனுப்பி உள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.
ஆனால் இதன் வேகம் போதவில்லை என்பதால் தற்போது இன்சைட் ரோபோட் அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இது வெற்றிகரமாக ஏவப்பட்டது. இன்னும் இது செவ்வாயை அடையவில்லை.

ஆய்வு
இந்த இன்சைட் ரோபோட்டுடன் இரண்டு சாட்டிலைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த இன்சைட் ரோபோட் செவ்வாய் கிரகத்தின் தரையில் இறங்கியவுடன் ஆய்வுகளை தொடங்கும். மாறாக இந்த இரண்டு சாட்டிலைட்டுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும். இதில் ஒன்று செவ்வாயை கடிகார திசையிலும், இன்னொன்று எதிர் கடிகார திசையிலும் சுற்றிவரும். இதன் மூலம் ஆராய்ச்சி தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்ப முடியும்.

நிலநடுக்கத்தை ஆய்வு செய்யும்
இந்த ரோபோட்டிற்குள் சிறிய நிலநடுக்க கருவி ஒன்றுள்ளது. இந்த நிலநடுக்க கருவி அங்கே சென்றதும் தனியாக பிரிந்து, தனியாக ஆராய்ச்சி செய்ய தொடங்கும், செவ்வாயில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று சில மாதங்களுக்கு முன்புதான் நாசா கண்டுபிடித்தது. அதை ஆராய்ச்சி செய்யவே தற்போது இந்த எந்திரம் அனுப்பப்பட்டுள்ளது. இது தினமும் அங்கே ஏற்படும் சிறிய அளவு நிலநடுக்கத்தை கூட ஆராய்ந்து அனுப்பும்.

குழி
இந்த இன்சைட் ரோபோட் செவ்வாயின் நிலப்பரப்பில் குழி தோண்டும். இரண்டடி வரை இது குழி தோண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் உள் பகுதியை ஆராய்ச்சி செய்ய முடியும். செவ்வாயின் தரையை உடைக்கும் அளவிற்கும் இதில் வலுவான ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால் செவ்வாயை குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாத பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் நாசா கூறியுள்ளது.

அடுத்து என்ன திட்டம்
இதோடு இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications