உலகில் தங்கம் எப்படி உருவானது தெரியுமா? விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் இன்று மிகவும் விலை மதிப்பு மிக்கதாக இருக்கும் தங்கம் எப்படி உருவானது என்பது பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
இந்த ஆய்வுகள் மூலமாக பதில்கள் சில கிடைத்திருந்தாலும், உறுதியாக விஞ்ஞானிகளால் இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை.

இப்படி இருக்கையில்தான் சமீபத்திய ஆய்வில் தங்கம் எப்படி உருவானது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் பிரபஞ்சம் முழுக்க ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் சிறிய அளவில் லித்தியம் மட்டுமே இருந்தது. தங்கம், பிளாட்டினம், யூரேனியம் போன்ற கனமான மூலக்கூறுகள் பிறகுதான் உருவாகியது. சூப்பர் நோவா போல வானில் நட்சத்திரங்கள் வெடித்தபோது அல்லது நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதி வெடித்தபோது இது உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.
தங்கம், வைரம் போன்ற கனமான பொருட்கள் வான் பொருட்கள் பலவற்றில் காணப்படுகிறது. மறுபுறம் நியூட்ரான் நட்சத்திர மோதல்கள் போன்றவை பல கோடி வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவே, பூமியில் எப்படி தங்கம் வந்தது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இதற்கான விடை ஏறத்தாழ தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தங்கம் உருவானதற்கான காரணம் மெக்னடார் எனப்படும் சக்தி வாய்ந்த நட்சத்திரம்தான் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த வகை நட்சத்திரங்கள் சில நேரங்களில் 'ஸ்டார்க்வேக்' எனும் நட்சத்திர பூகம்பத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி நடக்கும்போது மிகுந்த சக்தி வாய்ந்த ஒளிச்செறிவுகள் வெளியாகும். இவை நியூட்ரான்களால் நிரம்பியவை. எனவே கனமான மூலக்கூறுகள் உருவாவதற்கான சூழலை வழங்குகிறது. இதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அதாவது 2017-ல், இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதியபோது கனமான மூலக்கூறுகள் உருவானது கண்டறியப்பட்டது. இருப்பினும் இது உருவாக லேட்டாகிறது.
அதேபோல மெக்னடார் வெடிப்புகள் பிரபஞ்சத்தின் ஆரம்ப கட்டத்திலேயே தங்கம், பிளாட்டினம் போன்றவை உருவானதற்கான காரணமாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் அநிருத் படேல் தலைமையிலான குழு, 2004-ல் நடந்த ஒரு மெக்னடார் வெடிப்பின் டேட்டாவை சோதனைக்கு உள்ளாக்கியது. இதில் கனமான மூலக்கூறுகள் உருவாக வாய்ப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஆக நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்ததுதான்.












Click it and Unblock the Notifications