இதை பார்க்கவா, அதை பார்க்கவா, எதை பார்ப்பது என்றே தெரியலையே!
நியூயார்க்: கர்ஜிக்கும் சிங்கம், சுழற்றியடிக்கும் சூறாவளி என பார்க்க வியப்பூட்டும் வகையிலான புகைப்படங்கள் இந்த ஆண்டுக்கான நேஷனல் ஜியோகிராபிக் டிராவலர் புகைப்பட போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கை ஆண்டுதோறும் புகைப்பட போட்டியை நடத்தி வருகிறது. சுற்றுலாப்பயணிகள் தாங்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு அது தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான புகைப்பட போட்டிக்கான புகைப்படங்களை பலர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 30ம் தேதிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைக்க வேண்டும். வெற்றியாளர் நேஷனல் ஜியோகிராபிக் குழுவுடன் சேர்ந்து கோஸ்டா ரிகா, பனாமா கால்வாய்க்கு செல்லலாம். போட்டியாளர்கள் அனுப்பி வைத்துள்ள புகைப்படங்களில் சில,

நயாக்ரா நீர்வீழ்ச்சி
அமெரிக்காவில் உள்ள நயாக்ரா நீர்வீழ்ச்சி என்றுமே கண்களுக்கு விருந்து தான். 170 அடியில் அருவி நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை கிறிஸ்டீன் ஹெஸ் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

சூறாவளி
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கொலரடோ மாநிலத்தில் சிம்லா அருகே சூறாவளி சுழற்றிக் கொண்டு வந்ததை ஜேம்ஸ் ஸ்மார்ட் என்பவர் அழகாக புகைப்படம் எடுத்துள்ளார்.

பறவைகள்
இரண்டு அழகான பிளாமிங்கோ பறவைகள் ஒன்றையொன்று நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது எடுத்த புகைப்படத்தை போட்டிக்காக அனுப்பி வைத்துள்ளார் பூர்ணா கேதர்.

உணவகம்
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபாரில் கடலோரத்தில் இருக்கும் ராக் உணவகத்தை சூரிய அஸ்தமனத்தின்போது புகைப்படம் எடுத்துள்ளார் டேல் ஜான்சன்.

சிங்கம்
தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில் சிங்கம் ஒன்று கம்பீரமாக கர்ஜிப்பதை ஹமிஷ் மிட்சல் என்பவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த சிங்கம் 3 சிங்கங்களுடன் சேர்ந்து ஒரு யானையை கொன்ற சில மணிநேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சிங்கக் குட்டி
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நபோய்ஷோ விலங்குகள் காப்பகத்தில் சிங்கக் குட்டி ஒன்று தனது தாயின் தலை மீது குதித்து கொஞ்சும் காட்சியை மார்ஜா ஸ்வார்ட்ஸ் அழகுற புகைப்படம் எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications