பல்கேரியாவில் பிரமாண்டமாக நடக்கும் நேட்டோ நாடுகளின் விமானப்படை பயிற்சி
Subscribe to Oneindia Tamil

அமெரிக்கா மற்றும் 3 ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், ரோமானியா மற்றும் பல்கேரியா ஆகியவை சேர்ந்து கூட்டாக விமானப் பயிற்சியில் ஈடுபட தீர்மானித்தன. த்ரேசியன் ஸ்டார் 2014 என்று பெயரிடப்பட்ட அந்த பயிற்சி பல்கேரியாவில் உள்ள கிராப் இன்கேடீவோ கிராமத்தில் கடந்த 25ம் தேதி துவங்கியது.
இந்த பயிற்சி வரும் ஜூன் மாதம் 4ம் தேதி வரை நடைபெறும். 30 போர் விமானங்கள், அமெரிக்கா, கிரீஸ், ரோமானியா மற்றும் பல்கேரியாவைச் சேர்ந்த 800 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் விமானப்படையின் திறமையை மேம்படுத்தவும், சர்வதேச சூழலில் பணிபுரிய அவர்களை தயார் செய்வதும் தான் இந்த பயிற்சியின் நோக்கம்.












Click it and Unblock the Notifications