Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷார்ஜாவில் ”கொலுப் போட்டி”- சூப்பராக கொலு வைத்து போட்டோ அனுப்பி பரிசுகளை தட்டிச் செல்லுங்க!

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா: ஷார்ஜாவில் நவராத்திரியை ஒட்டி யூ.டி.எஸ் மற்றும் லைப் கேர் மெடிக்கல் சென்டர் ஷார்ஜா இணைந்து வழங்கும் "யூ.டி.எஸ் நவராத்திரி கொலு போட்டி - 2015" நடைபெற உள்ளது.

தேவியர்களை 9 நாட்களுக்கு வழிபடும் நவராத்திரியினை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் பொம்மைகளால் நிறைத்து கொலு வைப்பது வழக்கம். அப்படிப்பட்ட கொலுவினை சிறப்பாக பொம்மைகளாலும், புதிய ஐடியாக்களாலும் அலங்கரிப்பவர்களுக்கான போட்டியை நடத்த உள்ளது ஷார்ஜாவின் யூடிஎஸ்.

Navarathri golu competition in Sharjah

இப்போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் தேவையில்லை. சிறப்பாக வைக்கப்பட்டு வெற்றி பெறுகின்ற கொலுவிற்கு முதல் பரிசாக, 250 திர்காமும் (தோராயமாக 4400 ரூபாய்) , இரண்டவாது பரிசாக 150 திர்காமும் (2645 ரூபாய்) , மூன்றாவது பரிசாக 100 திர்காமும் (1763 ரூபாய்) வழங்கப்பட உள்ளது. மேலும், பல சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இதற்கு போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுவினை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அதில் ஒரு புகைப்படத்தில் கலந்து கொள்ளும் போட்டியாளாரும் இருக்க வேண்டும்.

இப்புகைப்படங்களை வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் யூ.ஏ.இயில் ( அபு தாபி, துபாய், ஷார்ஜா, அலைன், அஜ்மன்) வசிப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு: http://www.utrustus.org/?utm_source=ZohoCampaigns&utm_campaign=VIP+Golu_2015-10-08&utm_medium=email

மேலும் தொடர்புக்கு: +971505865375

முகவரி: லைப் கேர் மெடிக்கல் சென்டர், சாமா II பில்டிங், கிங் பைசல் ரோடு, பிகைண்ட் ஜம்போ சோனி, ஷார்ஜா.. சோ யூ.ஏ.இ தமிழர்களே உடனே கொலு வைங்க உங்க போட்டோக்களை அனுப்பி பரிசை வெல்லுங்க!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+