குவைத்தில் முதல் முறையாக "நீயா? நானா?" மற்றும் மாபெரும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் புனித ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் நாளை(10.7.2015) குவைத், கைத்தானில் உள்ள கே-டிக் தமிழ் ஜும்ஆ குத்பா பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகளுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமை வகிக்கிறார்.
புனித ரமலான்... தனி மனிதனை செம்மைப்படுத்துகிறது..! சமூகத்தை சீர் செய்கின்றது...!! என்ற தலைப்பில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் "நீயா? நானா?" - கருத்து பரிமாற்ற கள நிகழ்ச்சி நாளை நண்பகல் 11.45 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்ஷைஃக் "திருக்குர்ஆன் விரிவுரையாளர்" "தமிழ்த் தென்றல்" ஏரல் அ. பீர் முஹம்மது பாகவீ சிறப்புரை ஆற்றுகிறார்.
இதையடுத்து மாலை 5.30 மணி முதல் மாபெரும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் குவைத் இந்திய தூதர் மேதகு சுனில் ஜெயின் அவர்கள்,
குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசு பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்
கிராஅத்
தலைமையுரை
அறிமுகவுரை
வாழ்த்துரை
சிறப்பு சொற்பொழிவு
நன்றியுரை
திக்ரு / துஆ மஜ்லிஸ்
நோன்பு திறப்பு (நோன்புக் கஞ்சியுடன்)
மக்ரிப் தொழுகை
உணவு உபசரிப்பு
நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும். சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் சங்கத்தின் இணையதளத்தில் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது http://www.k-tic.com/live.php
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications