Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசித்ததும் வாந்தி வர வேண்டுமா.. அப்ப இதைப் படிங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

அடர்ந்த இரவு.. கும்மிருட்டு.. சாலையோரம் ஒரு கார் நிற்கிறது.. அருகே புதர்ப் பகுதியில் ஒரு இளம் பெண் இயற்கை உபாதைக்காக ஒதுங்கியுள்ளார். எல்லாம் முடிந்த பின்னர் வெளியே வருகிறார். காத்திருக்கும் காரில் ஏறி அமர்கிறார். காரில் அவரது கணவர் இருக்கிறார். கார் கிளம்புகிறது. வேகமாக விரைகிறது.. போகும் வழியில் இருளில் பாதை தெரியாமல் தடுமாறும் கார் தவறான பாதைக்குத் திரும்பி விடுகிறது. இருட்டில் இருவரும் திக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள்...

பொழுது விடிகிறது... அந்தப் பகுதியில் ஒரு கார் அனாதரவாக நிற்கிறது.. காரில் ஒரு ஆண் பிணம்.. சற்று தொலைவில் பெண்ணின் பல துண்டுகளாக சிதைக்கப்பட்ட உடல்.. முதல் நாள் இரவில் திக்குத் தெரியாமல் தத்தளித்த கணவன் மனைவியின் உடல்கள்தான் அவை. கணவனின் இரு கண்களில் ஒன்று இல்லை. குழி மட்டுமே உள்ளது....!

ஒரு பிளாஷ் பேக்....

அழகிய உடல்கள்

அழகிய உடல்கள்

ராப் பொது இடங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் சடலங்களை அப்புறப்படுத்தும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனது காதலி பெட்டி. இருவருக்கும் ஒரு வினோதமான பழக்கம்.. ஆம், இருவருமே இறந்த உடல்களுடன் செக்ஸ் புணர்ச்சி கொள்ளும் "நெக்ரோபீலி"யாவால் பீடிக்கப்பட்டவர்கள். தினசரி உடல்களை எடுத்து வந்து தனது நிறுவனத்தில் ஒப்படைப்பான் ராப். ஆனால் பல சமயங்களில் அழகான பெண்கள் மற்றும் ஆண்களின் உடல்கள் கிடைத்தால், அதை தனது வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவான். ஆண் உடல் பெட்டிக்கு, பெண் உடல் அவனுக்கு.

வீடெங்கும் உடல்கள்

வீடெங்கும் உடல்கள்

வீட்டில் எங்கு பார்த்தாலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் மனித உடல்கள், பிரபல கொலைகாரர்களின் பெரிய சைஸ் படங்கள், வீட்டில் அரிசி, பருப்பு வைத்திருப்பது போல துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புகள் ஜார்களில் அழகாக அடுக்க வைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அந்த வீடு ஒரு சவக்
கிடங்குதான். வீட்டில் உள்ள பாத் டப்பில் பெட்டி தண்ணீரில் குளிக்க மாட்டாள்.. மாறாக ரத்தக் குளியல்தான்.

காதலிக்கு அழகிய ஆண்

காதலிக்கு அழகிய ஆண்

காதலி பெட்டிக்கு அழகிய ஆண் பிரேதம் என்றால் உயிர் என்பதால் தினசரி ஏதாவது ஒரு அழகிய ஆண் பிரேதத்தை தவறாமல் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தான் ராப். அன்றும் அழகிய ஆண் பிணம் ஒன்று கிடைத்தது. மிக்க மகிழ்ச்சியுடன் பிரேதத்துடன் வீட்டுக்கு வந்த ராப்.. பெட்டி.. இன்று உனக்கு நல்ல வேட்டை.. போய் குளித்து விட்டு பிரஷ்ஷாக வா என்று கூறி பிணத்தைக் காட்டினான்.

வேலை போச்சு

வேலை போச்சு

பின்னர் தனது வேலைக்குக் கிளம்பி விட்டான். போன இடத்தில் அவனது அட்டகாசம் குறித்து நிறுவன உரி்மையாளர் கேள்வி கேட்க வாக்குவாதம் தடிக்கிறது.. உடனடியாக ராப்பை வேலையை விட்டு தூக்க விடுகிறார் உரிமையாளர்.. வேலையை இழக்கிறான் ராப்.

என் அழகிய பிரேதமே..

என் அழகிய பிரேதமே..

காட்சி மாறுகிறது.. பெட்டி வீடு.. படுக்கையில் பெட்டி.. அருகே அந்தப் புதிய சடலம். அந்த சடலத்திற்கு அருகே நிர்வாணமாக படுத்துக் கிடக்கிறாள் பெட்டி. கையில் ஒரு கதைப் புத்தகம்.. அந்தப் புத்தகத்தில் உள்ள கதையை பிரேதத்திற்குப் படித்துக் காட்டுகிறாள் பெட்டி. அது ஒரு காதல் கதை.. ரசம் பொங்கப் படிக்கும் பெட்டி. உன்னால் காதலை உணர முடிகிறதா என்று அந்தப் பிரதேதத்திடம் கேட்கிறாள்....

செத்துப் போ பூனையே

செத்துப் போ பூனையே

நள்ளிரவுக்குப் பின்னர் வீடு திரும்புகிறான் ராப். வீட்டில் பெட்டி இல்லை.. அந்தப் பிரேதமும் இல்லை. வேலை இழந்த கோபத்தில் வந்த அவன் கண் எதிரே ஒரு பூனை சிக்குகிறது. அதைத் தூக்கிப் போட்டு சரமாரியாக அடித்தே கொல்கிறான். ரத்தத்தைப் பிடித்து பாத் டப்பில் விடுகிறான். இறந்த உடலை ஆணியில் மாட்டி சுவரில் தொங்க விடுகிறான். ரத்தம் சொட்டச் சொட்ட பூனை.. தொங்குகிறது.

இது கூடவா முடியலை...!

இது கூடவா முடியலை...!

பின்னர் தூங்கிப் போய்கிறான்.. தூக்கத்தில் கனவு.. ஒரு விபச்சாரி அவனிடம் வருகிறாள்.. அவளுடன் உறவு வைக்கிறான். ஆனால் பிணங்களுடன் உறவு கொண்ட அவனால் நிஜமான உறவில் வெல்ல முடியவில்லை. விபச்சாரி கிண்டல் செய்கிறாள். கோபமடையும் ராப், அவளை அடித்துக் கொல்கிறான். பின்னர் இறந்த உடலுடன் உறவு கொண்டு கொக்கரிக்கிறான்.

ஓடினான் ஓடினான்..

ஓடினான் ஓடினான்..

இறந்த உடல்களுடன் உறவு கொண்டு உறவு கொண்டு மன நிலை மாறிப் போகிறது ராபுக்கு.. இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனை பிணங்கள் துரத்துகின்றன. கடைசியில் ஒரு இடத்தில் அமர்ந்து சுய இன்பம் கொள்கிறான்.. அப்போது கத்தியை எடுத்து தன்னைத் தானே குத்திக் கொண்டு செத்துப் போகிறான்....

நெக்ரோமேன்டிக்

நெக்ரோமேன்டிக்

படிக்கவே பயங்கரமாக இருக்கிறதே.. இதைப் படமாக பார்த்தால் எப்படி இருக்கும்... படு அகோரமாக இருக்கும் அல்லவா.. அப்படித்தான் இருந்தது 1987ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியான இந்த ஜெர்மனிப் படம்.. இதன் பெயர் நெக்ரோமேன்டிக். நெக்ரோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அப்பட்டமான படம் இது. நிஜமான நெக்ரோபீலியாக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை தத்ரூபமாக இதில் சித்தரித்திருந்தார் இதன் இயக்குநர் ஜோர்க் பட்கெர்ரீட்.

பீட்ரிஸ்

பீட்ரிஸ்

டக்டாரி லோரன்ஸ், பீட்ரிஸ் மனோவ்ஸ்கி, ஹெரால்ட் லன்ட் ஆகியோர் நடித்திருந்தனர். ஹெர்மன் காப், டக்டாரி லோரன்ஸ், ஜான் பாய் வால்டன் ஆகியோர் இணைந்து இசையில் மிரட்டியிருந்தனர்.

படமாடா இது

படமாடா இது

மேற்கு ஜெர்மனியில் தயாராகி வெளியான இப்படம் அப்போது பெரும் சர்ச்சையையும், கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தது. முக்கால் மணி நேரமே ஓடக் கூடிய இந்தப் படத்தைப் பார்த்த பலருக்கும் வாந்தி வராத குறை. படம் பார்த்தவர்களுக்கு பல நாட்கள் சாப்பாடே வாயில் இறங்கவில்லை. அப்படி ஒரு அவலமான படம் இது.

நெக்ரோ போர்னோ

நெக்ரோ போர்னோ

மேற்கு ஜெர்மனியில் முதலில் தடை செய்யப்பட்டு பின்னர் இது திரையிடப்பட்டது. நெக்ரோபீலியா குறித்த முதல் போர்னோ கிராபி படம் என்ற முத்திரையுடன் வெளியாகி சக்கை போடு போட்டது. இருப்பினும் ஐஸ்லாந்து, நார்வே, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இன்றும் கூட இந்தப் படத்திற்குத் தடை உள்ளது. ஆஸ்திரேலியா, கனடாவிலும் இது தடை செய்யப்பட்டது. நியூசிலாந்தும் தடை செய்தது.

தப்பு இல்லையே

தப்பு இல்லையே

நெக்ரோபீலியாக்கள் குறித்த கதைகளைத்தான் பலர் படித்துள்ளனர். நிஜமான நெக்ரோபீலியாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்தப் படம் நெக்ரோபீலியாக்களின் உட்பக்கத்தைக் காண உதவும் என்பதால் இதைத் தடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அப்போது வாதிட்டார் ஜோர்க். ஆனால் ஜோர்க் ஒரு மன நலம் பாதித்தவர் என்று மேற்கு ஜெர்மனியிலேயே அவரை பலரும் ஓரம் கட்டினர். இப்போது டிவிக்காக ஹாரர் சீரியல்களை எடுத்துக் கொண்டிருக்கிறாராம் ஜோர்க்.

பல மாதம் வாந்தி

பல மாதம் வாந்தி

டிமான்டி காலனியைப் பார்த்தும், காஞ்சனாவைப் பார்த்தும் பீதி அடையும் மக்களே.. மறக்காமல் இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள்.. பல மாதங்களுக்கு வாந்தி கன்பர்ம்ட்!

அடடே அடேட என்ன ரசம்.. என்ன ரசம்!

அடடே அடேட என்ன ரசம்.. என்ன ரசம்!

என்னதான் திட்டினாலும் பிணத்துடன் படுத்துக் கொண்டு, தனது உடலெங்கும் அந்தப் பிணத்தின் கையை தூக்கிப் போட்டு காதல் வசனம் பேசி, கண்களில் காம ரசம் பொங்க, உடலெங்கும் துடிக்க... நடிப்பை வெளிப்படுத்திய நடிகை பீட்ரிஸ் காட்டிய காமவெறி ரொம்ப அசலாக இருந்ததாக அப்போது பலரும் சிலாகித்துப் பாராட்டினார்கள் என்பதை இங்கு திகிலுடன் நினைவூட்ட விரும்புகிறோம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+