நெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா
டர்பன்: தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
இந்த தகவலை அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன. தற்போது ஜிண்ட்ஸி டென்மார்க்கில் தூதராக பதவியில் இருந்தார்.

ஜிண்ட்ஸி மண்டேலா திங்கள்கிழமை அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் இறந்ததாக அந்த நாட்டு தொலைக்காட்சியான, தென்னாப்பிரிக்க ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
2015 முதல் டென்மார்க்கிற்கான தென்னாப்பிரிக்காவின் தூதராக இருந்தார் ஜிண்ட்ஸி மண்டேலா.
1985 ஆம் ஆண்டு முதல் மண்டேலாவின் மகள் சர்வதேச முக்கியத்துவம் பெற்றார். ஏனெனில் அப்போதுதான், வெள்ளை சிறுபான்மை அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்க முன்வந்தது. ஆனால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டது. எனவே மண்டேலா விடுதலையாக சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது தந்தையின் இந்த முடிவை ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டியவர் ஜிண்ட்ஸி.
ஜிண்ட்ஸி, மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. 2013ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி, நெல்சன் மண்டேலா காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications