இந்தியாவின் மீட்பு பணிகளால் பாதுகாப்புக்கு ஆபத்து - சீனா உறவு பாதிப்பாம்: இது நேபாள மாவோயிஸ்டுகள்!
காத்மண்டு: நிலநடுக்க மீட்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதால் நேபாள இறையாண்மைக்கு ஆபத்து என்றும் சீனாவுடனான உறவு பாதிக்கும் என்றும் அந்நாட்டு மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.
80 ஆண்டுகளுக்குப் பின்னர் நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கிறது பயங்கர நிலநடுக்கம். தற்போதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 15 ஆயிரத்தையும் தாண்டும் எனக் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் நேபாளம் பேரழிவைச் சந்தித்தது முதல் தற்போது வரை இந்தியாதான் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தான் போன்றவையும் போட்டிக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நேபாள பிரதமர் கொய்ராலா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மாவோயிஸ்டுகள் தலைவர்கள் புஷ்பா கமல் தஹால், மோகன் பைத்யா மற்றும் நாரயண் மான் பிஜூக்சே ஆகியோர், மீட்புப் பணிகளில் இந்தியாவின் ஆதிக்கம் நேபாளத்தின் இறையாண்மைக்கு ஆபத்தானது என்று எச்சரித்திருக்கின்றனராம்.
இதனால் வெளிநாடுகளின் நிதி உதவிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருக்கின்றனர். அத்துடன் மீட்புப் பணிகளில் இந்தியாவின் கை ஓங்கி வருவது மற்றொரு எல்லைப் புற நாடான சீனாவுடனான நட்புறவை பாதிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆபத்துக்கு உதவுனா இப்படித்தானா?
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications