நேபாளத்தில் தோண்டத் தோண்ட கிடைக்கும் பிணங்கள்: பலி எண்ணிக்கை 2,200 ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 7.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுகத்தால் நேபாளத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான தரஹாரா கோபுரம் மற்றும் தர்பார் ஸ்கொயர் ஆகியவையும் சேதம் அடைந்துள்ளன.
நிலநடுக்கத்தால் நேபாளம் நிலைகுலைந்து போயுள்ளது.

பலி
நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது. இதில் காத்மாண்டுவில் மட்டும் 1000 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இமய மலை
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இமய மலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேறும் வீரர்கள் 17 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்தியர்கள் பலி
சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு நேபாளத்தில் வசித்து வந்த இந்திய தூதரக ஊழியரின் மகள் உள்பட 2 இந்தியர்கள் பலியாகியுள்ளனர் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய தூதரக வளாகத்தில் இருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பொதுப்பணித்துறை அதிகாரியின் மகள் பலியாகியுள்ளார். இது தவிர காத்மாண்டுவில் உள்ள பிர் மருத்துவமனையில் ஒரு இந்தியர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியர்கள் மீட்பு
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நேபாளத்தில் இருந்து 550 இந்தியர்களை இந்திய விமானப்படை மீட்டுள்ளது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. நேபாளத்தில் மீட்பு பணி மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் உதவி செய்ய முன்வந்துள்ளது.

தரஹாரா கோபுரம்
காத்மாண்டுவில் உள்ள தரஹாரா கோபுரம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து சுமார் 200 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான காத்மாண்டுவில் உள்ள தர்பார் ஸ்கொயர் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications