நீர்மின் நிலையத்தையே மூழ்கடித்த வெள்ளம்.. நேபாளத்தில் நடந்ததை பாருங்க.. ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திபெத்தில் இருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கி 105 இந்தியர்கள் உள்பட பல நூறு பேர் மாயமாகி உள்ளனர். 8 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் நேபாளத்தில் உள்ள ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டு இருந்த நீர் மின்நிலையத்தை மூழ்கடித்து வெள்ளம் சீறிப்பாய்வது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அண்டை நாடாக உள்ள நேபாளம் -திபெத்துடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று திபெத் பகுதியில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து நேபாளத்தை நோக்கி வந்தது.

nepal-flood-6-hydro-power-station-damaged-sudden-flood-in-nepal

நேபாளத்தில் உள்ள நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓடும் போட்டி கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரும்பு பாலங்கள் அடித்து செல்லப்பட்டனர். மேலும் சில கிராமங்களை மொத்தமாக வெள்ளம் அடித்து சென்றுள்ளது.

இந்த வெள்ளத்தில் மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதுபற்றி நேபாளத்தின் சுற்றுலா வாரியம் சார்பில், ''வெள்ளத்தில் 384 சுற்றுலா பயணிகள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் 291 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இதில் 105 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். மற்ற 93 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது'' என்றார்.

நேபாளத்தில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் பேரிடர் படையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்தில் ஏராளமான ரோடுகள், பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

நேபாளத்தின் வடக்கு மாவட்டங்களில் மின்சாரம் தயாரிக்கும் மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நேபாளத்தின் மின்வாரிய சார்பில், ''ரசுவாகாதி, சில்லிமின, திரிசூலி 3ஏ, திரிசூலி 3பி ஹப் 220 கேவி சப்ஸ்டேஷன், திரிசூலி ஹைட்ரோபவர் ஸ்டேஷன், தேவிகாட் ஹைட்ரோபவர் ஸ்டேஷன் என்று 6 நீர்மின்நிலையம் மற்றும் மின்பரிமாற்ற நிலையங்கள் சேதமடைந்துள்ளன'' என்றார்.

இதற்கிடையே தான் நேபாளத்தில் அமைதியாக ஓடும் ஆற்றில் திடீரென்று வெள்ளம் அதிகரிப்பது மற்றும் நீர்மின் நிலையத்தை மூழ்கடிதது வெள்ளம் சீறிப்பாய்வதும், இரும்பு பாலங்களை வெள்ளம் அடித்து செல்வது தொடர்பாக பதற வைக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+