கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. வெள்ளத்தில் தவிக்கும் நேபாளுக்கு இந்தியா உதவிக்கரம் – மோடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

காத்மாண்ட்: நேபாளத்தில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 16 பேர் பலியான நிலையில் 105 இந்தியர்கள் உள்பட 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் தான் நேபாளம் பிரதமர் பாலேந்திர ஷாவிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்ததோடு, இந்தியா அனைத்து வகைகளிலும் உதவ தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

அண்டை நாடாக உள்ள நேபாளம் -திபெத்துடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று திபெத் பகுதியில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து நேபாளத்தை நோக்கி வந்தது.

நேபாளத்தில் உள்ள நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓடும் போட்டி கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரும்பு பாலங்கள் அடித்து செல்லப்பட்டனர். மேலும் சில கிராமங்களை மொத்தமாக வெள்ளம் அடித்து சென்றுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் வரை பலியாகி உள்ளனர். நேபாளத்தில் சுற்றுலா சென்று 105 இந்தியர்கள் உள்பட மொத்தம் 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மாயமானவர்களை மீட்கும் பணியில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Nepal Flood

இந்நிலையில் தான் நேபாள பிரதமர் பலேந்திர ஷாவை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்கள் பற்றி அந்த நாட்டின் பிரதமர் பலேந்திர ஷாவிடம் பேசி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். இந்த கடினமான சூழலில் நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்கிறார்கள்.

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்தேன். நேபாளத்திற்கு தேவையான அனைத்து மனிதபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. நேபாள நிவாரண பணிகளில் நம்முடைய குழுவினர் ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றனர்'' என்று வருகின்றனர்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+