13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு

Subscribe to Oneindia Tamil

காத்மண்டு: காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இந்த கலியுகத்தில் காதலுக்கு வயதும் இல்லை போல. 14 வயதான பள்ளி மாணவியை 13 வயதான பள்ளி மாணவர் காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. நேபாள நாட்டு சட்டப்படி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோரும் காவல்துறையினர் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.

நேபாளத்தில் ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது 20. ஆனால் ரூபிவேலி பகுதியைச் சேர்ந்த சிறுமி பபித்ரா தாமங், 14 வயதான அந்த சிறுமிக்கு அதே பள்ளியில் 5வது கிரேட் படிக்கும் ரமேஷ் தாமங் என்ற சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது. நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் நெருக்கமானார்கள். இதில் பபித்ரா கர்ப்பமானார். பதறிப்போன பெற்றோர் பபித்ராவை கண்டித்தனர். ரமேஷ் தாமங்கை விட்டு விலக பபித்ரா தயாராக இல்லை.

Nepal officials in quandary as 14 year old gives birth after partnering with underage boy

சமீபத்தில் பபித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு இரண்டு கைகளிலும் நடுவிரல் இல்லையாம். மைனர் தம்பதியர் வீட்டை விட்டு வெளியேறி மாவட்ட நிர்வாகத்திடம் தஞ்சமடைந்தனர். இருவருமே மைனர் என்பதால் இந்த காதலை சட்டப்படி அங்கீகரிக்க முடியாது என்று மாவட்ட நிர்வாகம் கூறி விட்டது. அதே நேரத்தில் குழந்தை பராமரிக்க உதவி செய்வதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாமங் சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு திருமண வயதை அடைந்த உடன் மணமுடித்து வைக்கப்படும் என்று ரமேஷ் சமூகத்தினர் கூறியுள்ளனர். அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் இருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளாராம். கலி முத்திப்போச்சு என்பது போல பிஞ்சு வயதிலேயே காதல் கர்ப்பம் என்று கிளம்பி விட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+