நேபாள விமான விபத்தில் பைலட் தவிர அனைவரும் பலி.. நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் கடைசி நிமிட வீடியோ!
காத்மாண்டு: நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் விமானம் ரன்வேயில் இருந்து மேலே எழும்பிய போது கீழே விழுந்து வெடித்துச் சிதறிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. நேபாள விமான விபத்தின் கடைசி நிமிட காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து போக்காராவுக்கு இன்று காலை 11 மணியளவில் சவுர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 19 பேருடன் புறப்பட்ட போது திடீரென மிகப்பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானத்தை விமானி இயக்கிய போது ஓடுபாதையில் இருந்து மேலே ஏறும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை அடுத்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் 18 பேரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. விமானத்தில் பயணம் செய்த 18 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் விமானி மணிஷ் ஷக்யா மட்டும் உயிர் பிழைத்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓடுதளத்தில் சென்றபோதே விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியது. CRJ200 என்ற இந்த விமானம் 50 பேர் அமரக்கூடியது. வானில் பறப்பதற்கு முன்பாகவே கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது என்று காத்மாண்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் விமான விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள போக்காரா விமான நிலையத்தில், விமானம் தரை இறங்கியபோது கீழே விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
Moment of Crash-
— Anchor Manish Kumar (@manishA20058305) July 24, 2024
- 18 People including crews are dead. -According to local news
- Pilot admitted in KMC Sinamangal Hospital in Kathmandu. #Kathmandu #Nepal #sauryaairlines #tribhuvanairport #planecrash #Breaking pic.twitter.com/YUDNHbWsm1
தற்போது, விமானம் பறக்கத் தொடங்கும்போது நொறுங்கிய விபத்து நடந்த காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஓடுதளத்தில் இருந்து பறக்க முயன்ற விமானம் விபத்தில் சிக்கிய வீடியோக்கள் அதைத் தொடர்ந்து தீப்பிடித்து அந்தப் பகுதியே புகை மண்டலமான காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன.
அந்த வீடியோவில், சரியாக இன்று காலை 11.13 மணியளவில் ஓடுபாதையில் இருந்து மேலே ஏறத் தொடங்கிய அடுத்த நொடியே, ஓடுபாதையிலேயே விழுந்து விமானம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications