Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் பொருளாதரத் தடைக்கு நேபாளம் பதிலடி... சீனாவிடம் இருந்து எரிபொருட்களை வாங்க அதிரடி முடிவு!

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: இந்தியா நடைமுறைப்படுத்தி வரும் அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவிடம் இருந்து வான்வழியாக எரிபொருட்களை கொண்டுவருவதற்கு நேபாளம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.

உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமைக்குரியது நேபாளம். இந்த நாட்டில் நீடித்து வந்த மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய அரசியல்சாசனம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்துநாடாக இருந்தபோதும் நேபாளம் 'மதச்சார்பற்ற அரசியல்சாசன'த்தை பின்பற்றும் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் இதை இந்தியா விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. நேபாளம் தொடர்ந்தும் 'இந்துநாடாக' இருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் விருப்பமாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் அதிருப்தி

இந்தியாவின் அதிருப்தி

அதே நேரத்தில் நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள், புதிய அரசியசாசனப்படி தாங்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம் என்று கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது பெரும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கிளர்ச்சியைத் தூண்டிவிட்டதே இந்தியாதான் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து புதிய அரசியல் சாசனத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை இந்தியா நேபாளத்திடம் அளித்தது. ஆனால் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதை நேபாளம் விரும்பாமல் நிராகரித்தது. இதில் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

இதனால் நேபாளம் மீது அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடையை இந்தியா விதித்து வருகிறது. நேபாளத்துக்கான எரிபொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து தரைவழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது பீகார், உத்தரப்பிரதேச எல்லைகளில் சுமார் 4 ஆயிரம் டிரக்குகள் நேபாளத்துக்குள் செல்லாமல் காத்திருக்கின்றன.

ஆகையால் நேபாளத்தை இந்த பொருளாதாரத் தடை கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால் இந்திய அரசோ நாங்கள் பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறோம்...எல்லையில் மாதேஸிகள் போராட்டங்களை தொடர்வதால் வாகனங்கள் நேபாளத்துக்குள் நுழைய முடியாத நிலை இருக்கிறது.. இந்த தடையை நாங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்று சாக்குபோக்கு சொல்லி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த நேபாள மக்களும் இந்தியா மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.

இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள்

இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள்

இந்த கோபத்தின் உச்சமாக இந்திய தொலைக்காட்சிகளுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்துள்ளன. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பு நேற்று கூடிய ட்விட்டர்வாசிகள் 200 பேர் இந்திய தூதரகத்துக்கு 'பெட்ரோலை அன்பளிப்பாக' அளிக்கும் போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன.

சீனாவிடம் உதவி

சீனாவிடம் உதவி

இதனால் நிலைமையை சமாளிக்க அண்டை நாடான சீனாவிடம் உதவி கோர முடிவு செய்துள்ளது நேபாளம். முதல் கட்டமாக எரிபொருட்களை சீனாவில் இருந்து விமானங்கள் மூலம் கொண்டுவருவதற்கு அந்நாடு முடிவு செய்துள்ளது. அதேபோல் வங்கதேசத்திடம் இருந்தும் எரிபொருட்களை விமானம் மூலம் கொண்டுவரவும் நேபாளம் திட்டமிட்டுள்ளது.

அடாவடி வெளியுறவு கொள்கை

அடாவடி வெளியுறவு கொள்கை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை வளர்ப்போம் என்று கூறி தமது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளையெல்லாம் அழைத்து பெருமிதப்பட்டுக் கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தற்போதைய அடாவடித்தனமான வெளியுறவுக் கொள்கை நேபாளத்தை 'வாலண்டியராக' சீனா பக்கம் தள்ளிவிட்டிருக்கிறது.

இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்பதற்கேற்ப இதற்காக காத்திருந்த சீனாவும் நேபாளத்துக்கான எரிபொருட்களை வாரிவழங்க உள்ளது. ஏற்கெனவே இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான் அனைத்துமே சீனாவின் தோளில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது நேபாளமும் சீனாவின் நட்புசக்தியாகிவிட்டது.

இந்த சூழ்நிலைகள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத்துறை அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அதில் நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு கொழுந்துவிட்டெரிகிறது என்று மத்திய அரசை எச்சரித்தும் உள்ளது.

மத்திய மோடி அரசின் 'இந்துத்துவா' சார்பு நிலையில் நட்பு சக்தி ஒன்றை இந்தியா நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்திய வெளியுறவுக் கொள்கையில் விழுந்த பலத்த அடி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

உள்ளதும் போச்சா...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+