நேபாள நாடாளுமன்றம் நள்ளிரவில் திடீர் கலைப்பு- நவ.-ல் 2 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்த உத்தரவு!
காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராததால் நேற்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். மேலும் நவம்பர் மாதத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடந்த ஆண்டு உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனையடுத்து நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமராக இருந்த ஷர்மா ஒலி பரிந்துரைத்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நடவடிக்கை மேற்கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

ஆனால் நேபாள உச்சநீதிமன்றம் தலையிட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை நிராகரித்தது. இதனையடுத்து நேபாள பிரதமராக ஷர்மா ஒலி மீண்டும் நியமிக்கப்பட்டார். அத்துடன் கடந்த 10-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷர்மா ஒலி தோல்வி அடைந்தார். இதனால் புதிய அரசு அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகளும் புதிய அரசு அமைக்க முன்வரவில்லை. இதனால் நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவில் கலைத்து உத்தரவிட்டார் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி. அத்துடன் நவம்பர் 12, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications