உலகிலேயே மிக அழகான கையெழுத்து இதுதான்.. நேபாளத்தையே எழுதி தரலாம்.. மிரள வைத்த இளம் பெண்
காத்மாண்டு: நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்தை நம்மால் எழுத முடியவில்லையே என்று நிச்சயம் கம்ப்யூட்டரே வெட்கப்படும்.
அழகான கையெழுத்து உள்ளவர்கள் படிப்பில் பொதுவாக சிறந்து விளங்குவார்கள்.கையெழுத்து போலவே தலையெழுத்தும் சிறப்பாக இருக்கும். பள்ளி தேர்வுகளில் சாதாரண கையெழுத்து உள்ளவர்களை விட அழகான கையெழுத்து உள்ளவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அவர்களின் எழுத்து நடையும் படிப்பும் சிறப்பாக இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார்கள். மிகப்பெரிய பல ஜாம்பவான்களின் கையெழுத்து பார்க்க அற்புதமாக இருக்கும்.சிலர் இதில் விதிவிலக்காகவும் இருக்கலாம்.
The talented Nepali young girl Prakriti Malla,the awarded Best Hand Writing in the world has written a congratulation letter to the Leadership of UAE and its people on the occasion of the UAE 51 Spirit of the Union,and hand it over to the embassy during the ceremony #Nepal #UAE pic.twitter.com/1PsdOikqzf
— UAE Embassy Nepal (@UAEEmbNepal) December 4, 2022
அழகான கையெழுத்து உருவாக சிறு வயதில் இருந்தே அதற்கு பயிற்சி பெற வேண்டும். சிறு வயதில் இருந்தே சரியான எழுத்து பயிற்சி பெற்றவர்கள் நல்ல கையெழுத்தை பெறுவார்கள்.
நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கையெழுத்து உலகிலேய மிக நேர்த்தியான அழகான கையெழுத்து என்று புகழை பெற்றுள்ளது. தொடர் பயிற்சியால் நேபாள மாணவி இந்த நிலையை எட்டி உள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த 16 வயதாகும், பிரகிருதி மல்லா என்ற மாணவியின் கையெழுத்து தான் உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது.

சிறுமி பிரகிருதி மல்லா, தனது 14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, அவரது கையெழுத்தில் உருவான கடிதத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அப்போதே அந்த கையெழுத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த நோட்டில் இருந்த கையெழுத்தின் அழகைக் கண்டு நேபாள மக்கள் வியந்து பாராட்டி, பாராட்டு மழை பொழிந்தார்கள்.
இந்நிலையில் நேபாள மாணவி பிரகிருதி மல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஆண்டு ஒற்றுமை தினத்தை ( UAE 51 Spirit of the Union) முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாழ்த்துக் கடிதம் எழுதினார். விழாவின் போது அவர் தனிப்பட்ட முறையில் கடிதத்தை தூதரகத்திற்கு வழங்கினார்.

இந்நிலையில் நேபாளத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில் உள்ள கடிதம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்வீட் பெரிய அளவில் வைரல் ஆகி உள்ளது. மிக நேர்த்தியான அந்த கையெழுத்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. நீங்களும் இதுபோல் அழகான கையெழுத்து உள்ளவர்களை பார்த்து இருந்தால் அதை பற்றி கருத்தி பகிருங்கள்.
Prakriti Malla - a student in Nepal is thr girl recognized with the most beautiful handwriting in the world.
— D Prasanth Nair (@DPrasanthNair) December 29, 2022
Amazing !
Rcvd from WA pic.twitter.com/RZHODnQsgm
இந்நிலையில் நேபாளத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் வெளியிட்ட ட்விட்டில் உள்ள கடிதம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்வீட் பெரிய அளவில் வைரல் ஆகி உள்ளது. மிக நேர்த்தியான அந்த கையெழுத்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. நீங்களும் இதுபோல் அழகான கையெழுத்து உள்ளவர்களை பார்த்து இருந்தால் அதை பற்றி கருத்தி பகிருங்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications