நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது.. என்ன நடக்கிறது இஸ்ரேலில்? பகிரங்க மன்னிப்பு கேட்ட நெதன்யாகு!
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி திடீரென ஹமாஸ் படையினர் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலை முன்கூட்டியே கணித்து தடுக்க தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் வந்த நிலையில், தற்போது அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார்.
பாலஸ்தீனத்தில் தொடக்கத்தில் அகதிகளாக குடியேறிய யூதர்கள், பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க தொடங்கினர். பாலஸ்தீனத்திற்குள் உருவான இஸ்ரேல் மெல்ல மெல்ல வளர்ந்து முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுக்க, பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாக தொடங்கின. இதில் ஒன்றுதான் ஹமாஸ். கடந்த 2005ம் ஆண்டு காசா முனை பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் அங்கிருந்து விலகிக்கொண்டது. இதனையடுத்து காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது.

அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு தீவிரமடைந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதலை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக பாராகிளைடர் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சுமார் 230 பேர் வரை பணயக்கைதிகளாக ஹமாஸ் படையினர் சிறை பிடித்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடு, உலகில் மிகவும் திறன் வாய்ந்த உளவு அமைப்பான மொசாட்-ஐ கொண்டிருக்கும் நாடு என்று பெயரெடுத்த இஸ்ரேலுக்கு ஏன் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியவில்லை? என்று கேள்வியெழுந்தது.
மட்டுமல்லாது இந்த தாக்குதல் சம்பவம் இஸ்ரேலின் இமேஜை கடுமையாக பாதித்தது. எனவே 7ம் தேதி தொடங்கி 24வது நாளாக இன்று வரை காசா மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. என்னதான் இஸ்ரேல் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை ஏன் நெதன்யாகு தலைமையிலான பாதுகாப்பு படை தடுக்க தவறியது என இஸ்ரேல் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த நெதன்யாகு, போர் குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உங்கள் தவறை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று திரும்ப திரும்ப கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, "போருக்குப் பிறகு இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அப்போது நான் உட்பட அனைவரும் பதிலளிக்க வேண்டும்" என்று நெதன்யாகு மழுப்பினார். இதே கேள்வி இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரியிடம் எழுப்பப்பட்டபோது, "நான் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன். நாங்கள் இப்போது போரில் இருக்கிறோம், அதில் கவனம் செலுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்பு படையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி நாங்கள் உண்மையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவோம்" என்று கூறினார்.
இந்நிலையில் பிரதமர் நெதன்யாகுவின் கருத்து குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். அதாவது, "நான் தவறு செய்துவிட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயங்களைச் சொல்லி இருக்கக்கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நமது பாதுகாப்புக்காக போரில் முன் களத்தில் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு படைத் தலைவர்களுக்கும் எனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்" என x சோஷியல் மீடியா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, "நமது நாட்டின் மீதான, ஹமாஸின் திடீர் தாக்குதல் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் நான் பெறவில்லை. நமது நாட்டுடன் ஹமாஸ் பேச்சுவார்தையில் ஈடுபட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண இருப்பதாகதான் நான் உட்பட அனைத்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் நம்பிக்கொண்டிருந்தோம்" என்று ட்வீட் செய்திருந்தார். இதற்குதான் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்துதான் தற்போது அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications