இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல்: பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மீண்டும் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதர வலது சாரி கட்சிகளுடன் இணைந்து பிரதமர் நெதன்யாகு மீண்டும் கூட்டணி அரசை அமைக்கிறார்.

இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 ஆண்டுகளாகப் பிரதமர் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் முடிவதற்கு சுமார் 3 ஆண்டுகள் இருக்கும்போதே நாடாளுமன்ற பொதுத் தேர்தலை அறிவித்தார்.

இந்தத் தேர்தலில் 25 கட்சிகள் போட்டியிட்டன. இஸ்ரேலில் சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நேற்று காலையில் 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பிரதமர் நெதன்யாகு ஜெருசலேமில் வாக்களித்தார்.

இஸ்ரேலைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில்லை. விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை நியமிக்கும்.

இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 120 இடங்களில் நெதன்யாகுவில் லிகுட் கட்சி 30 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியான ஜியோனிஸ்ட் யூனியன் 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தலிலும் வலதுசாரி லிகுட் கட்சியைச் சேர்ந்த நெதன்யாகு பிற வலதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இருக்கிறார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், இது இஸ்ரேலிய மக்களின் வெற்றி என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் நெதன்யாகு,.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+