விசாரணை வளையத்திற்குள் நெதன்யாகு? இஸ்ரேலில் தலைகீழாக மாறிய நிலைமை! அமெரிக்கா ஷாக்!
டெல் அவிவ்: இஸ்ரேலில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் அரபு கட்சி முறைகேடு செய்திருந்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டைவிட, அவரது அலுவலகத்திலிருந்து வந்த தகவல்கள்தான் தேர்தல் களத்தையே பரபரப்பாக்கின. இந்நிலையில், இது குறித்து இஸ்ரேலிய காவல்துறை மற்றும் அட்டர்னி ஜெனரல், நெதன்யாகு அலுவலகத்தில் விசாரணையை தொடங்கியிருக்கிறது.
தேர்தல் சமயத்தில், வாக்கு மோசடி நடந்ததாக நெதன்யாகு அலுவலகம் பொய்யான தகவல்களை பரப்பியது என்று எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது நெதன்யாகு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அக்.27ம் தேதியன்று இஸ்ரேலில் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னர், தெற்கு இஸ்ரேலில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரபு கட்சியின் ஆதரவாளர்கள். கட்சியின் சார்பில், பணம் கொடுத்து ஓட்டை வாங்க முயன்றதாக நெதன்யாகுவின் தலைமை அலுவலக அதிகாரி இடோ நோர்டன், இஸ்ரேலிய காவல்துறை ஆணையருக்கு தகவல் கொடுத்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கைது சம்பவம் அத்துடன் நிற்கவில்லை.. கைதை காரணம் காட்டி.. பாருங்க, அரபு கட்சிகள் காசு கொடுத்து ஓட்டு வாங்கி, மொத்த தேர்தலையும் சீர்குலைக்க பிளான் செய்திருக்கின்றன என்று நெதன்யாகுவின் லிகுட் கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது. இது அரபு கட்சிகள் மீதான நேரடி குற்றச்சாட்டாகும். அதுவும் தேர்தல் நாளில் இப்படியான கைதும், குற்றச்சாட்டும் கிளம்பியது அக்கட்சிக்கு பெரிய பின்னடைவாக மாறின.
இருப்பினும், தேர்தல் முடிவுகளில் அரபு கட்சிகள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றன. மறுபுறம் நெதன்யாகு கட்சி பெரும்பான்மையை பெறாமல் தோல்வியடைந்தன. கூடுதலான இடங்களை ஜெயித்த எதிர்க்கட்சியாலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அரபு கட்சிகள் யாருக்கு ஆதரவு தருகிறதோ.. அக்கட்சிதான் ஆட்சியில் அமர முடியும்.
நிலைமை இப்படி மாறியிருக்கும் நிலையில்.. கைது செய்யப்பட்ட அரபு ஆதரவாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயன்றது பொய் குற்றச்சாட்டு என்பது தெரிய வந்திருக்கிறது. எனவே இப்படியான புகார் கொடுத்த நெதன்யாகு அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மட்டுமல்லாது தேர்தலில் எந்த மோசடியும் நடக்கவில்லை என்று ஆணையம் அறிவித்துவிட்டது.
இப்படியெல்லாம் விசாரணை நடக்கும் என்று யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இஸ்ரேலில் நிலைமை முழுவதுமாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் முடிவுகள்தான்.


Click it and Unblock the Notifications
