மனைவியை கணவன் தாராளமாக அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் மனைவியை கணவன் அடித்தால் அது குற்றம் இல்லை என்று கூறும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதையும் மீறி யாராவது சாதிக்க நினைத்தால் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் ஆண்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரிகளை அடித்தால் அது குற்றமாகாது என்ற ஒரு சட்ட திருத்தம் ஆப்கானிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் தற்போது ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டதிருத்தத்திற்கு மட்டும் ஒப்புதல் கிடைத்துவிட்டால் பெண்கள் தங்களை கணவர் தாக்கியதாக புகார் கொடுத்தாலும் அதனால் பலனில்லை. எனவே பெண்கள் அடித்தால் அடியை வாங்கிக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டிய அவல நிலை ஏற்படும்.
முன்னதாக பெண்களுக்கு எதிரான கொடுமையை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி குழந்தை திருமணம், பிரச்சனைகளை தீர்க்க பெண்களை விற்பது, வாங்குவது, அடித்து துன்புறுத்துவது, கொடுமை படுத்துவது ஆகியவை குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications