இதெல்லாம் அப்பவே எங்க "இடி அமீன்" செஞ்சுட்டாரு.. நீங்க ரொம்ப லேட் அமெரிக்கன்ஸ்!
வாஷிங்டன்: மழை படத்தில் ஒரு காமெடி வரும். அந்தக் காமெடிதான் இந்த செய்தியைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.
அமெரிக்க காமெடி நடிகரும், தயாரிப்பாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான வில் பெர்ரல் ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இது வானிலை அறிக்கை தொடர்பான இணையதளமாகும். முற்றிலும் நகைச்சுவையான வானிலை அறிக்கை இணையதளமாகும் இது. இதில் வானிலை குறித்த விவரத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இதில் போய் பார்த்தால், அதில் ஒரு இதில் ஒரு ஆப் உள்ளது. Funny Or Die நிறுவனம் உருவாக்கிய ஆப் அது. ஆப்பின் பெயரும் Funny Or Die தான்.

இந்த ஆப்பை உங்களது மொபைல் போனில் ஏற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தளத்திலிருந்து வானிலை செய்திகளை அறியலாம். வானிலை செய்தியுடன் கூடவே காமெடியான ஒரு வரி பன்ச் வசனங்களும் அதில் இணைந்து வருமாம்.
இதுகுறித்து Funny Or Die நிறுவனத்தின் டிக் குளோவர் கூறுகையில், இது உண்மையான வானிலை அறிக்கைதான். ஆனால் வானிலை என்பது துல்லியமாக கணிக்க முடியாதது. எனவே அதன் அடிப்படையில் சில நகைச்சுவைத் துணுக்குகளுடன் இந்த வானிலை அறிக்கையை நாங்கள் பயன்பாட்டாளர்களுக்கு வழங்குகிறோம் என்றார். இந்த ஆப் இலவசமானது.
இந்த வானிலை அறிக்கையுடன் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை நாம் இமெயிலுக்கும் அனுப்பிக் கொள்ளலாம், பேஸ்புக், டிவிட்டரிலும் ஷேர் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்கர்கள் இதில் ரொம்ப லேட்தான். பல வருடங்களுக்கு முன்பு மழை படம் வந்தது. அதில் இடி அமீன் என்ற பெயரில் வானிலை அறிக்கை வாசிப்பவராக வருவார் மதன் பாப். வடிவேலுவிடம் அவர் சிக்கி படாதபாடு படுவார். விரலை வைத்து மழை வருமா வராதா என்றும் கூறி கலக்குவார். அந்த ஜோக்தான் இதைப் படிக்கையில் நினைவுக்கு வந்தது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications