For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது போலி "சரக்கா".. கையும் களவுமாக கண்டுபிடிக்க வந்துருச்சு போலி "நாக்கு"!

போலி விஸ்கியை கண்டுபிடிக்க ஜெர்மனியில் விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை கண்டுபிடித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெர்லின்: போலி விஸ்கியை கண்டுபிடிக்க செயற்கை நாக்கை கண்டறிந்துள்ளனர் ஜெர்மன் விஞ்ஞானிகள். இதன் மூலம் சரக்கு ஒரிஜினலா மிக்ஸிங்கா என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

ஜெர்மனியில் உள்ள ஹெய்டெல் பெர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்த வேலையை செய்துள்ளனர். இதன் மூலம் போலி விஸ்கியை எளிதாக கண்டறிய முடியுமாம்.

செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட நாக்கு விஸ்கியின் தரத்தையும் அறிய முடியும். விஸ்கியின் பிராண்டு மற்றும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் தயாரிக்கப்பட்ட காலம் போன்றவற்றையும் அறிய முடியும்.

விஸ்கி

விஸ்கி

பொதுவாக ஸ்காட்லாண்ட் விஸ்கியானது ஐரீஷ், அமெரிக்க விஸ்கிகளிலிருந்து மாறுபடும். அதை கூட கண்டறியலாம். இந்த நாக்கின் மூலம் மொத்தம் 22 வகையான விஸ்கிகளின் சுவையை அறிய முடியும். இருந்தாலும் 33 விதமான விஸ்கியின் தரம் மற்றும் சுவை இதன் மூலம் கண்டறிய முடிந்தது. புதிய குடிகாரர்கள் விஸ்கியின் தரம் கண்டறிய வசதியாக இந்த செயற்கை நாக்கு இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவரவுகளுக்காக...

புதுவரவுகளுக்காக...

புதிய குடிகாரர்கள் ஒவ்வொரு விஸ்கியாக கண்டறிந்து அதில் எது தங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை குடித்து மகிழ நல்ல வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் தேவையில்லாத பிடிக்காத விஸ்கிகள் குடிப்பது தடுக்கப்படும். எந்த பொருளாக இருந்தாலும் நாம் விதவிதமாக செய்து பார்க்க பார்க்க அதன் ருசி கூடும் என்பது உண்மையிலும் உண்மை.

ஒரிஜினாலா? அல்லது டூப்ளிகேட்டா?

ஒரிஜினாலா? அல்லது டூப்ளிகேட்டா?

அதைத் தான் இவர்கள் விஞ்ஞான பூர்வமாக விளக்குகின்றனர் போல. சரக்குகளில் ஆல்கஹாலின் அளவை சோதனையிட மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி என்ற முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம்ம இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாக தகவல்கள் வருகின்றன. இந்த விஞ்ஞானிகள் அரிசி ஒரிஜினலா டூப்ளிகேட்டா என்பதை அறிய ஒன்றை கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

கள்ள உறவுக்கு...

கள்ள உறவுக்கு...

அதை காட்டிலும் முக்கியமான பலதார மணங்களை செய்து இளைஞர்கள், இளைஞிகள் பரஸ்பரம் ஏமாற்றி வருகின்றனர். இதுபோதாக்குறைக்கு கள்ளக்காதல் வேறு. இதனால் கொலைகள் ஏராளம். மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ கள்ள உறவு இருக்குதா என்பதை அறிய எதையாவது கண்டுபிடியுங்களேன் ஆல் விஞ்ஞானிஸ்.!

கள்ள உறவுக்கு...

கள்ள உறவுக்கு...

அதை காட்டிலும் முக்கியமான பலதார மணங்களை செய்து இளைஞர்கள், இளைஞிகள் பரஸ்பரம் ஏமாற்றி வருகின்றனர். இதுபோதாக்குறைக்கு கள்ளக்காதல் வேறு. இதனால் கொலைகள் ஏராளம். மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ கள்ள உறவு இருக்குதா என்பதை அறிய எதையாவது கண்டுபிடியுங்களேன் ஆல் விஞ்ஞானிஸ்.!

English summary
Scientists have developed an 'artificial tongue' which can help novice drinkers determine the difference between a Scottish malt whisky and an Irish blend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X