”புதிய தலைமுறை குழந்தைகள் இனி எய்ட்ஸில் இருந்து தப்பிக்கும்”
பாஸ்டன்: எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை எளிதாக காப்பாற்றிவிடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை உரிய நேரத்தில் அளிப்பதன் மூலம் குழந்தையை பூரண நலம் பெற செய்யலாம் என கூறியுள்ளனர்.
மேலும், இந்த முறையை குழந்தை பிறந்த சிலமணி நேரங்களில் மேற்கொள்ள வேண்டும்.

காப்பாற்றப் பட்ட குழந்தை:
சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அது பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது.

சந்தேகமும்,சர்ச்சையும்:
தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது அது பூரண நலமுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தபோது பலரும் இதுகுறித்த சந்தேக சர்ச்சையை எழுப்பினர்.

மீண்டும் சிகிச்சை:
ஆனால் அதன்பின் கலிபோர்னியா மாநிலத்தில் லாங் பீச் என்ற இடத்தில் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைக்கு அதே முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

எய்ட்ஸ் சோதனை:
தற்போது ஒன்பது மாதங்கள் நிறைந்துள்ள இந்தப் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வரும்போதிலும் அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய் சோதனைகள் நெகடிவ் என்ற முடிவைத் தந்துள்ளன என்றும் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மில்லர் குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் டெபோரா பர்சாத் தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கு தகவல்:
நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற எய்ட்ஸ் நோய் கருத்தரங்கு ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்ட ஆய்வாளர்கள் இதுபோன்று இன்னும் ஐந்து வழக்குகள் கனடாவிலும், மூன்று வழக்குகள் தென்னாப்பிரிக்காவிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சோதனை அடிப்படை:
இன்னும் மூன்று மாதங்களுக்குள் இதே சிகிச்சை முறைகள் சோதனை முறை அடிப்படையில் 50 பச்சிளம் குழந்தைகளிடத்தில் மேற்கொள்ளப்படும் என்று கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.சில வருடங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும்

வெற்றிபெறும் சிகிச்சை:
இந்தக் குழந்தைகள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டால் ஆண்டுதோறும் இதே நோயுடன் பிறக்கும் 3,00,000 குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் தொடங்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications