புதிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஷ்வந்த் சிங்கிற்கு உறவினர்.. எப்படி தெரியுமா?
லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமரான போாிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். கடந்த 1993-ம் ஆண்டில் அவர் திருமணம் செய்துகொண்ட அவரது மனைவி மெரினா வீலர் அரை இந்தியர் ஆவார்.
பிரிட்டனை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, நாட்டின் பிரதமராக பதவி வகிப்பார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவருக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹன்டை தோற்கடித்தார்.

இந்நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் மனைவியான மெரினா வீலர் மறைந்த ஆசிரியரும் எழுத்தாளருமான குஷ்வந்த் சிங்கிற்கு மருமகள் முறை ஆவார்.
குஷ்வந்த் சிங்கிற்கு போரிஸ் ஜான்சனின் மனைவி உறவினராவதால் அந்த வகையில் நம் நாட்டில் பிரிட்டன் பிரதமருக்கு ஏராளமான உறவினர்கள் உள்ளனர். இதனால் இங்கிலாந்து-இந்தியா இடையேயான உறவை சிறப்பாக மேம்படுத்த பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட உறவை ஜான்சன் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஜான்சன் எழுதிய கடிதத்தில், மோடியுடனான தனது சந்திப்பின் போது, இந்தியாவும் இங்கிலாந்தும் எவ்வாறு நவீன ஜனநாயக நாடுகள் என்பதையும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக மோரிஸ் ஜான்சன் தன்னை இந்தியாவின் மருமகன் என்று குறிப்பிட்டு கொண்டார் ஏனெனில் அவரது மனைவியான மெரினாவின் தாய், தீப் சிங், இன்னும் உயிருடன் இருக்கிறார் இவர் குஷ்வந்த் சிங்கின் இளைய சகோதரர் தல்ஜித் சிங்கை மணந்தவர் ஆவார்
தீப் சிங்கின் அக்கா பெயர் அமர்ஜித் சிங்.அவர் திருமணம் செய்துகொண்டது குஷ்வந்த் சிங்கின் அண்ணனான பகவத் சிங்கை. அதே போல பகவத் சிங்கின் சகோதரி மகள் அம்ப்ரீதா சிங்கின் முதல் கணவர் பிரபல இந்தி நடிகர் சாயிஃப் அலிகான்.அவர்களது மகள்தான் பாலிவுட் நட்சத்திரம் சாரா அலிகான்
இவ்வாறு இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய போரிஸ் ஜான்சன் தற்போது பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளது இரு நாடுளுக்கிடையேயான உறவை தனிப்பட்ட முறையில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications