அமெரிக்க அரசியல்: இன்னொரு ஒபாமா ஆவாரா பெர்னி சான்டர்ஸ்?
வாஷிங்டன்(யு:எஸ்) : ஜனநாயகக் கட்சி உட்கட்சி தேர்திலில் தனிக் கொடி நாட்டி வந்த ஹிலரி க்ளிண்டனுக்கு போட்டியாக களத்தில் குதித்துள்ள பெர்னி சான்டர்ஸ்க்கு ஆதரவு பெருகி வருகிறது.
குடியரசுக் கட்சியில் ஒரு டஜனுக்கும் மேலான தலைவர்கள் உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், எதிரணியில் ஹிலரி க்ளிண்டன் எந்த போட்டியும் இல்லாமல் அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக ஆதரவு பெற்று வந்தார்.

குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருமளவில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை ஹிலரி க்ளிண்டனுக்கு கிடைக்கும் என்று பரவலாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அவரை எதிர்த்து ஜன் நாயகக் கட்சியில் போட்டியிடும் 74 வயது பெர்னி சான்டர்ஸ்க்கு நியூஹாம்ஷையர் மற்றும் ஐயோவா மாகாணங்களில் ஹிலரிக்கு இணையான ஆதரவு கிடைத்துள்ளது.. புதிய கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹிலரி க்ளிண்டன் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். முன்னதாக 2008 ஆம் ஆண்டுக்கான தேர்தல் போது, ஹிலரி தான் அதிபர் வேட்பாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப் பட்டது.

அப்போதைய முதல் தடவை செனட்டராக இருந்த பராக் ஒபாமா,யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிலரியை விட அதிக ஆதரவு பெற்று அதிபர் வேட்பாளராகி வெற்றி பெற்று இரண்டு தடவை அதிபராகவும் ஆகிவிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலரிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியையும் கொடுத்தார்.
ஒபாமாவைப் போல், முதல் தடவையாக வெர்மாண்ட் மாகாண செனட்டராக வெற்றி பெற்ற பெர்னி சான்டர்ஸ், களத்தில் குதித்த போது வெறும் பரபரப்புக்காக போட்டியிடுகிறார் என்று தான் கருதப்பட்டது.
நடுத்தர வர்க்க மக்களின் பொருளாதாரத்தை மையக்கருத்தாக கொண்டு பிரச்சாரம் செய்து வரும் இவருக்கு நடுத்தர வர்க்க மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. எங்கே, ஒபாமா போல் ஹிலரிக்கு ஷாக் கொடுத்து அதிபர் வேட்பாளர் ஆகிவிடுவாரோ என்று சில அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியூஹாம்ஷையரிலும் ஐயோவாவிலும், கருத்துக் கணிப்பில் ஹிலரிக்கு இணையாக வாக்குகள் பெற்று சமன் செய்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு தனக்கே ஆச்சரியமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் ஹிலரி அதிக அளவில் முன்னணியில் இருப்பதால் பெர்னியால் எந்த பாதிப்பும் வராது என்று ஹிலரி தரப்பு நம்புகிறது. ஆனாலும் சொந்த இமெயிலை அரசு வேலைக்காக உபயோகப்படுத்தியது, பெங்காஸி விவகாரங்களினால் ஹிலரிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இன்னொரு பக்கம் பெண்களின் நலம் காக்கும் வீராங்கனையாக உருவெடுத்து வரும் ஹிலரிக்கு ஒட்டு மொத்த பெண்களின் வாக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
இன்னொரு ஒபாமா ஆவாரா இல்லையா என்பதைக் காட்டிலும், சத்தமே இல்லாமல் இருந்த ஜனநாயகக் கட்சி உட்கட்சி தேர்தலிலும் பெர்னி வருகையால் பரபரப்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications