வாலே போகலை.. கத்தி வந்தது டும் டும் டும்.. ஆப்பிரிக்காவில் பரவும் கொரோனாவை விட கொடிய வைரஸ் எக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

புருசெல்ஸ்: கொரோனாவைவிட மோசமான உயிர் கொல்லியான எக்ஸ் நோய் ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி உள்ளதாகவும் இது விரைவில் உலக நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளது. இந்த கொடிய வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது.

இந்த வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவியது. 2021 பிறந்த பின்னரும் இது முடிந்தபாடில்லை. இதனால் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆப்பிரிக்க கண்டம்

ஆப்பிரிக்க கண்டம்

இது இவ்வாறிருக்க, எக்ஸ் எனப்படும் ஒரு நோய் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலை காடுகளில் பரவி வருவதாக கூறப்படுகிறது. அது போல் இது உலக நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கொரோனாவை விட அதிக உயிர் பலியை ஏற்படுத்தும் என பெல்சியம் நாட்டு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

தாக்கம்

தாக்கம்

1976ஆம் ஆண்டு எபோலா வைரஸ் குறித்த சோதனையில் பீட்டர் பயட் ஈடுபட்டிருந்தார். அந்த சமயம் அவருக்கு உதவியாக இருந்த மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவஸ் டம்ஃபாம். இவர் ஒரு இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் காலம் காலமாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது.

ரேபிஸ்

ரேபிஸ்

கடந்த காலங்களில் மஞ்சள் காய்ச்சல், ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களைத் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவியுள்ளது. வரும் நாட்களில் இது போன்று மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறி

அறிகுறி

எபோலா வைரஸ் தாக்கத்திலிருந்து ஏற்படும் அறிகுறிகள் போலவே தற்போது எக்ஸ் நோய் அறிகுறிகள் இருக்கும். காங்கோவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எக்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார். எக்ஸ் என்றால் எதிர்பாராதது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+