அலுவலகத்தில் உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கப் போகும் கருவி: உஷார்...
லண்டன்: அலுவலகத்தில் ஊழியர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் கவனிக்கும் கருவி ஒன்றை ஜப்பானிய நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
அலுவலகத்தில் ஊழியர்கள் எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறார்கள், எத்தனை முறை இடத்தில் இருந்து எழுந்து செல்கிறார்கள் என்பதை உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்நிலையில் அவர்களின் வேலை எளிதாகவிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஹிட்டாச்சி
ஜப்பானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹிட்டாச்சி பிசினஸ் மைக்ரோஸ்கோப் என்ற கருவியை உருவாக்கியுள்ளது. பேட்ஜ் அல்லது ஐடி கார்டு போன்று இருக்கும் இந்த கருவியில் சிப்கள்(chips) இருக்கும்.

ஊழியர்கள்
பிசினஸ் மைக்ரோஸ்கோப்பில் இருக்கும் சிப்கள் ஊழியர்கள் அலுவலகத்தில் நாள் முழுவதும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கும்.

சக ஊழியர்கள்
பிசினஸ் மைக்ரோஸ்கோப் அடுத்தவர்கள் அணிந்திருக்கும் பேட்ஜை ரீட் செய்து ஊழியர்கள் எவ்வளவு தூரத்தில் நின்று கொண்டு பேசுகிறார்கள் என்பதையும் கணக்கிடும்.

பாஸ்
ஊழியர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எத்தனை முறை எழுந்து செல்கிறார்கள், எங்கெல்லாம் செல்கிறார்கள், எத்தனை முறை கழிவறைக்கு செல்கிறார்கள் என்பதை இக்கருவி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துவிடும். மேலும் அலுவலக கூட்டத்தில் ஒரு ஊழியர்கள் எத்தனை முறை பேசுகிறார், எவ்வளவு பயனுள்ள தகவல்களை அளிக்கிறார் என்பதையும் இக்கருவி தெரிவிக்குமாம்.

சிறப்பான வேலை
சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கருவி ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற உதவியாக இருக்கும் என்று ஹிட்டாச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications