குவைத் வாழ் இந்தியர்களுக்கு நல்ல செய்தி: தட்கல் முறையில் விண்ணப்பித்த அன்றே பாஸ்போர்ட்
குவைத்: குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்த அன்றே அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் வசித்து வரும் இந்தியர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்த அன்றே அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேதம் அடைந்தாலோ, தொலைந்துவிட்டாலோ, அதன் பக்கங்கள் தீர்ந்துவிட்டாலோ, தேதி முடிந்துவிட்டாலோ தட்கல் முறையில் விண்ணப்பித்தால் உடனே பாஸ்போர்ட் கிடைக்கும்.

தட்கல் முறையில் விண்ணப்பித்து 6 முதல் 8 மணிநேரத்திற்குள் அளிக்கப்படும் பாஸ்போர்ட்டுக்கு வழக்கமான கட்டணத்துடன் சேர்த்து 46 குவைத் தினார் வசூலிக்கப்படும்.
தட்கல் முறையில் விண்ணப்பித்தால் செலுத்த வேண்டிய கட்டணம்:
சாதாரண பாஸ்போர்ட்(36 பக்கங்கள்) - குவைத் தினார் 69.50
ஜம்போ பாஸ்போர்ட் (60 பக்கங்கள்) - குவைத் தினார் 77.50
பாஸ்போர்ட் சேதம் அடைந்தாலோ, தொலைந்தாலோ - சாதாரண பாஸ்போர்ட்டுக்கு 92.50 தினார், ஜம்போ பாஸ்போர்ட்டுக்கு 100.50 தினார்.
குவைத் குடிமக்கள் அங்கு உள்ள தூதரகம் மூலம் அவசர விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தால் அதே தேதியில் விசா வழங்கப்படும். அதற்கு கூடுதலாக 12 தினார் அளிக்க வேண்டும். தட்கல் பாஸ்போர்ட், அவசர விசா தொடர்பாக விண்ணப்பதாரர்கள் 22530600 எக்ஸ்டென்ஷன் 279 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது கன்சுலாரின் தலைமை செயலாளர் கே.கே. பஹெல் அவர்களை 97229948 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications