4 ஈராக்கியர்களை தலை கீழாக கட்டி உயிரோடு எரித்து வீடியோ வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ்
பாக்தாத்: ஈராக்கில் நான்கு பேரை சங்கிலியால் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அவர்களை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் விடியோ படம் பிடித்து அந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
காண்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் அந்த வீடியோ காட்சியில் காவி உடை அணிந்த நான்கு பேரை ஒரு வீடியோவை பார்க்க வைக்கின்றனர்.

மரண பயம்
காவி உடையணிந்த ஈராக்கியர்கள் நால்வரும் மரண பயத்தோடு அந்த வீடியோவைப் பார்க்கின்றனர். எப்படி சாகப்போகிறோம் என்பதை உணர்ந்து அவர்களின் முகத்தில் நடுக்கம் பரவுகிறது.

தலைகீழாக தொங்க விட்டு
கறுப்பு உடை அணிந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒரு மணற்பாங்கான இடத்திற்கு நான்கு ஈராக்கியர்களை அழைத்து வந்து இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டிருக்கின்றனர்.

காவியும் கறுப்பு உடையும்
தீவிரவாதிகள் பெட்ரோலை கீழே கொட்டி நெருப்பை பற்ற வைக்கின்றனர். நெருப்பு மெதுவாக நகர்ந்து செல்கிறது. அதைப் பார்த்து உயிரோடு தொங்கும் நால்வரும் எமனை நேரில் பார்த்த அதிர்ச்சியில் உறைகின்றனர்.

தீயில் கருகி மரணம்
நெருப்பின் நாக்கு மெல்ல மெல்ல நால்வரையும் தொட மரணவேதனையில் நால்வரும் துடிக்கின்றனர். முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சிரிக்கின்றனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகள்
அந்த விடியோவில் தோன்றும் முகமூடி அணிந்த தீவிரவாதி இந்த வீடியோவானது தலைநகர் பாக்தாத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள ருட்பா நகரில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றான்.

பழிக்குப் பழி
ஈராக் அரசு படையினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை உயிருடன் கொளுத்தினர். அதற்குப் பழி வாங்கவே இப்போது 4 பேர் எரித்துக் கொல்லப்படுகின்றனர்" எனவும் வீடியோவில் தோன்றும் தீவிரவாதி தெரிவித்துள்ளான்.

அதிர்ச்சியலைகள்
நான்கு ஈராக்கியர்கள் தீவிரவாதிகளால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வீடியோ இணைய தளங்களில் வெளியாகி அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

உயிரோடு புதைத்து
சவக்குழி தோண்டவைத்து அதில் உயிரோடு புதைத்து கொல்லும் தீவிரவாதிகள் தற்போது கெபாப் போல வெட்டி கூறு போட்டும், உயிரோடு நெருப்பில் வைத்து எரித்தும் விதம் விதமாக கொன்று வீடியோவை வெளியிடுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications