10 லட்சம் டாலர் மதிப்பில் ‘கம்பீர நீச்சலுடை’ அணிந்து போஸ் கொடுத்த மிஸ்.யுனிவர்ஸ்
மாஸ்கோ: மிஸ் யுனிவர்ஸ் பட்டம்வென்றுள்ள வெனிசுலாவின் கேப்ரியலா இஸ்லர், மிஸ் யுனிவர்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள 10 லட்சம் டாலர் மதிப்பிலான நீச்சல் உடையை அணிந்து போஸ் கொடுத்தார்.
மாஸ்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார் இஸ்லர். இதையடுத்து மாஸ்கோவின் கன்சர்ட் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் மிஸ் யுனிவர்ஸ் என்ற அந்தஸ்துடன் 10 லட்சம் டாலர் மதிப்பிலான நீச்சல் உடையில் தோன்றி போஸ் கொடுத்தார்.
25 வயதாகும் இஸ்லர் பின்னர் செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது...

ரொம்ப சந்தோஷம்....
மிஸ் யுனிவர்ஸ் அழகியாக எனது முதல் நாளை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ரொம்ப சாதாரணமான பெண். எளிமையானவள்.

வேடிக்கைத் தருணங்கள்...
வேடிக்கையுடன், இந்த நிமிடத்தை அனுபவிக்கவே இங்கு வந்திருக்கிறேன். இரவெல்லாம் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் போனில் பேசிப் பேசிக் களித்தேன்.

ஏழாவது அழகி...
வெனிசுலாவைச் சேர்ந்த ஏழாவது மிஸ் யுனிவர்ஸ் அழகி நான் என்பது கெளரவமாக உள்ளது. 85 பேரை தோற்கடித்து இதை சாதித்துள்ளேன் என்றார்.

அச்சமில்லை...அச்சமில்லை
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு இஸ்லர் அளித்த பதில்தான் அவருக்கு பட்டத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. எது மிகப் பெரிய பயம் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அனைத்துப் பயங்களிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். அப்போதுதான் நாம் மேலும் வலுவடைய வாய்ப்பாக அது அமையும் என்று அதிரடியாக பதிலளித்தார் இஸ்லர்.

10 லட்சம் டாலர்...
இந்தப் போட்டிக்குப் பின்னர் இத்தாலி நாட்டின் உள்ளாடை நிறுவனத்தின் நீச்சல் உடை தயாரிப்பு நீச்சல் உடையில் தோன்றி காட்சி தந்தார். இந்த நீச்சல் உடை 10 லட்சம் டாலர் மதிப்பிலானதாகும்.

எளிய கம்பீரமான உடை...
இந்த நீச்சல் உடையில் எமரால்ட், ரூபி மற்றும் வைரக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உடை குறித்து அவர் கூறுகையில், இது ரொம்ப எளிமையான உடை, ஆனால் கம்பீரமாக இருக்கிறது, என்னைப் போல என்றார்.

900 கற்கள்....
மொத்தம் 900 கற்களைக் கொண்டு இந்த உடையை உருவாக்கியுள்ளனராம். மிஸ் யுனிவர்ஸ் நிறுவனத்திற்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

விற்பனை....
இந்த உடை விற்பனைக்கு விடப்படுமா என்பதை மிஸ் யுனிவர்ஸ் நிறுவனத்தினர் தெரிவிக்கவில்லை. அதேபோல இஸ்லருக்கும் இந்த உடை அடுத்து எப்படி பயன்படுத்தப்படப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அதுவரை இதை அவரே வைத்திருப்பாராம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications