விண் கற்களை விட ஆபத்தானவை “காமெட்ஸ்” - அதிர்ச்சி தகவல் சொல்லும் விஞ்ஞானிகள்!
லண்டன்: பூமிக்கு விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால்தான் அதிக ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் சுற்றித்திரியும் விண் கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது.

ஆனால் அதைவிட தொலை தூரத்தில் உள்ள வால் நட்சத்திரங்களால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
20 ஆண்டுகளில் கண்டுபிடிப்பு:
இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் குழு இந்த தகவலை அறிவித்துள்ளது. சூரிய குடும்பத்தின் தொலை தூர கிரகங்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியுன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையை ஏராளமான வால் நட்சத்திரங்கள் வழி மறிக்கின்றன. இது கடந்த 20 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்டார்ஸ் நட்சத்திரக் கூட்டம்:
"சென்டார்ஸ்" என்றழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரங்கள் 50 முதல் 100 கி.மீட்டருக்கு மேல் குறுக்களவு கொண்டது. இது எப்போதாவது புவியிர்ப்பு மண்டலத்துக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வால் நடசத்திரத்தின் எடையும், புவியிர்ப்பு மண்டலத்தை கடக்கும் அனைத்து விண்கற்களின் ஒட்டு மொத்த எடைக்கு சமமானதாக இருக்கும்.
பூமியைத் தாக்கும்:
அவை சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே வரும் போது பல துண்டுகளாக பிரிந்து தூசியாக மாறலாம். ஆனால் அவற்றில் இருந்து வெளியேறும் விண்கல் துகள்கள் பூமியை தாக்காமல் இருக்காது. இதனால் விண்கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
டைனோசர்கள் அழிவு:
6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்மீன் கூட்டத்து வால் நட்சத்திரம் விழுந்த தால் டைனோசர் இனம் அழிந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனவே பூமியை பாதுகாக்கும் முயற்சியில் அருகேயுள்ள விண் கற்களில் மட்டுமின்றி, தொலை தூரத்திலுள்ள வால் நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications